கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு 13 வயது சிறுமி கொலை... பாஜக நிர்வாகி உட்பட மூன்று பேர் கைது.!

கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு 13 வயது சிறுமி கொலை... பாஜக நிர்வாகி உட்பட மூன்று பேர் கைது.!


13-year-old-girl-was-gang-raped-and-murdered-police-arr

உத்திரபிரதேசம் மாநிலத்தில்  13 வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக பாஜக நிர்வாகி உட்பட மூன்று பேரை மாநில போலீசார் கைது செய்துள்ளனர்.

உத்திர பிரதேசம் மாநிலம் பாஸ்தி மாவட்டம் கோவர் பகுதியைச் சார்ந்த 13 வயது சிறுமி ஒருவர் காய்கறி வாங்குவதற்காக வெளியே சென்று இருக்கிறார். பின்னர் அவர் வீடு திரும்பவே இல்லை. இதனைத் தொடர்ந்து பல்வேறு இடங்களில் தேடியும் சிறுமி கிடைக்கவில்லை. இந்நிலையில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதி ஒன்றில் காயங்களுடன் மீட்கப்பட்டார் சிறுமி.

UttarPradesh

அதனைத் தொடர்ந்து அவரை மருத்துவமனையில் அனுமதித்த போது ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும் பிரேத பரிசோதனையில் சிறுமி பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்த அவரது பெற்றோர் அளித்த புகாரின் பேரில் விசாரணை செய்த காவல்துறை  மூன்று பேரை கைது செய்திருக்கிறது.

கைது செய்யப்பட்ட மூன்று பேரும் அப்பகுதியைச் சார்ந்த மோனுசாக், ராஜன் நிஸாக் மற்றும் குந்தன் சிங் என தெரிய வந்துள்ளது. இவர்களில் ஒருவர்  பாரதிய ஜனதா  கட்சியின் கிசான் மோட்சா சங்கத்தின் துணைத் தலைவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் பாஜக குற்றவாளிகளை  காப்பாற்ற முயற்சிப்பதாக உள்ளூர் வாசிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.