வெளி மாநிலங்களையும் விட்டு வைக்காத கோயம்பேடு; ஆந்திராவில் 13 பேருக்கு கொரோனா!

வெளி மாநிலங்களையும் விட்டு வைக்காத கோயம்பேடு; ஆந்திராவில் 13 பேருக்கு கொரோனா!


13 andhra salesperson came to koyembedu tested corono positive

சென்னை கோயம்பேடு மார்கெட்டிற்கு வந்து சென்ற ஆந்திராவை சேர்ந்த 13 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் பெரும்பாலான கொரோனா பாதிப்புகள் கோயம்பேடு மார்க்கெட்டினை மையப்படுத்தியே ஏற்பட்டு வருகின்றன. கோயம்பேடு மார்க்கெட்டில் வியாபாரம் செய்தவர்கள், வேலை பார்த்தவர்கள், சில்லறை வியாபாரத்திற்காக காய்கறி, பூ போன்றவைகளை வாங்கி சென்றவர்கள் என பலருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

koyembedu

குறிப்பாக கோயம்பேடு மார்க்கெட்டில் வேலை பார்த்துவிட்டு தனது சொந்த மாவட்டங்களுக்கு சென்ற கடலூர், விழுப்புரம், அரியலூர் மாவட்டங்களை சேர்ந்த பலர் கொரோனா தொற்றால் அவதிப்பட்டு வருகின்றனர். தற்போது கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து வெளி மாநிலத்திற்கும் கொரோனா பரவியுள்ளது.

ஆந்திரா மாநிலம் சத்யவேடு அருகே நாகலாபுரத்தை சேர்ந்த பல வியாபாரிகள்  கோயம்பேடு மார்கெட்டிற்கு வந்து சென்றுள்ளனர். அவர்களில் 13 பேருக்கு தற்போது கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.