12ஆம் வகுப்பில் 99 மார்க் வாங்கிய மாணவிக்கு 0 மார்க் கொடுத்து பெயில் ஆக்கிய கொடுமை!

12ஆம் வகுப்பில் 99 மார்க் வாங்கிய மாணவிக்கு 0 மார்க் கொடுத்து பெயில் ஆக்கிய கொடுமை!


12th-student---exam-mark---thelungana-state

தெலுங்கானாவில் 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி நவ்யா என்பவர் தேர்வு முடிவுக்காக ஆவலுடன் காத்திருந்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் வெளியான தேர்வு முடிவுகளில் அவரது முடிவினை கண்ட அவர் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளார். காரணம் ஒரு பாடத்தில் 0 மதிப்பெண் வழங்கப்பட்டு பெயில் ஆக்கப்பட்டிருந்தார்.

அந்தப் பாடத்தை நன்றாக எழுதி இருந்த அவர் மறுதிருத்தம் செய்ய விண்ணப்பித்திருந்தார். அதன்மூலம் வெளியான முடிவின் படி அந்த மாணவி 99 மதிப்பெண் பெற்றிருந்தார். இந்த சம்பவம் தெலுங்கானாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

school girl

இச்சம்பவத்தை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அந்த விடைத்தாளை திருத்தி மதிப்பெண் வழங்கியது உமாதேவி என்ற ஆசிரியை என்ற தகவல் கிடைத்துள்ளது. இதனால் அம்மாநில பள்ளிக்கல்வித்துறை அந்த ஆசிரியை சஸ்பெண்ட் செய்து ரூ.5000 அபராதமும் விதித்துள்ளது.

மேலும் விடைத்தாள் திருத்ததும் பணியின் போது அந்த ஆசிரியை பணியாற்றி அறையின் கண்காணிப்பாளராக இருந்த ஆசிரியர் விஜயகுமார் என்பவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.