இந்தியா

வில்வித்தை பயிற்சியின்போது சிறுமிக்கு நேர்ந்த விபரீதம்! வெளியான பதறவைக்கும் சம்பவம்!

Summary:

12 year Girl injured by archery practise

அசாமின் சபுயாவில் மாநில  விளையாட்டு கமிஷன் அமைந்துள்ளது. இங்கு வில்வித்தை பயிற்சியில் 12 வயதிற்கான சிறுவர் மற்றும் சிறுமிகள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்துள்ளனர்.

அப்போது சிறுவன் ஒருவன் எய்த அம்பு தவறுதலாக அங்கிருந்த ஷிவாஞ்சினி கோகைகன் என்ற 12 வயது வீராங்கனையின் வலதுகை தோள்பட்டையில் பாய்ந்தது.

இதனால் வலியில் துடிதுடித்த அந்த சிறுமிக்கு முதலுதவி சிகிச்சை வழங்கப்பட்டு,  பின் ஹெலிகாப்டர் மூலம் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.அங்கு சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

மேலும் சிறுமியின் தோள்பட்டையில் பாய்ந்த அம்பு அவரது எலும்பை துளைத்துள்ளது. இந்நிலையில் தற்போது அவருக்கு உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை சார்பில் கூறப்பட்டுள்ளது.


Advertisement