இந்தியா

செல்போனை திருடிய 12 ஆம் வகுப்பு மாணவி..! அவர் சொன்ன காரணத்தை கேட்டு மனம் உருகிய உரிமையாளர்..!

Summary:

12 standard girl stole cell phone for paying school fees

பள்ளிக்கட்டணம் செலுத்துவதற்காக 12 ஆம் வகுப்பு மாணவி ஒருவர் நபர் ஒருவரின் செல்போனை திருடிய சம்பவம் மதியபிரதேசத்தில் நடந்துள்ளது.

மத்தியபிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்த 12 ஆம் வகுப்பு மாணவி ஒருவர் தனியார் துப்பறியும் ஏஜென்ட் ஒருவரின் செல்போனை திருடியுள்ளார். துப்பறியும் என்ஜெண்டான அவர் தனது செல்போன் காணாமல்போன சிலமணிநேரங்களில் தனது செல்போனை திருடிய சிறுமியை கண்டுபிடித்துவிட்டார்.

இதுகுறித்து அந்த சிறுமியிடம் அந்த நபர் விசாரித்ததில் சிறுமி  கூறிய காரணத்தை கேட்டு அதிர்ச்சியடைந்துள்ளார். தற்போது 12 ஆம் வகுப்பு படித்துவரும் அந்த சிறுமி தனது 2500 ரூபாய் கல்வி கட்டணத்தை செலுத்த அவரது தந்தையும், தாயும் தவித்து வருவதால் வேறு வழியில்லாமல் செல்போனை திருடி அடகுவைத்து, அந்த பணத்தைக்கொண்டு கல்வி கட்டணத்தை செலுத்தியதாக கூறியுள்ளார்.

அதற்கு சாட்சியாக செல்போன் அடகுவைத்த ரசீது மற்றும் கல்வி கட்டணம் செலுத்திய ரசீது ஆகியவற்றை அந்த நபரிடம் காட்டியுள்ளார். இதனை பார்த்து என்ன சொல்வது என்று தெரியாமல் தவித்த அந்த நபர் சிறுமிக்கு புத்திமதி கூறிவிட்டு, அவரது கல்வி கட்டணத்தை இனி தானே செலுத்துவதாக கூறியுள்ளார்.


Advertisement