இப்படி ஒரு மரணம் யாருக்கும் வரக்கூடாது..!! வாந்தி எடுக்க பேருந்து ஜன்னலிலிருந்து தலையை நீட்டிய சிறுமி.. தலைதுண்டாகி உயிரிழந்த சோகம்..11 years old girl decapitated after truck brushes past bus in Madhya Pradesh

பேருந்தில் சென்றுகொண்டிருந்த சிறுமி வாந்தி எடுக்க தலையை வெளியே நீட்டியபோது தலை துண்டாகி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலம் கந்த்வாவிலிருந்து இந்தூரில் நடைபெறும் திருமண நிகழ்ச்சி ஒன்றிக்காக தாய் ஒருவர் தனது இரண்டு மகள்களை அழைத்துக்கொண்டு பேருந்தில் சென்றுள்ளார். பேருந்து சென்றுகொண்டிருந்தபோது தமன்னா என்ற 11 வயது சிறுமிக்கு வாந்தி வந்துள்ளது.

இதனால் பேருந்தின் ஜன்னல் வழியாக தலையை நீட்டி தமன்னா வாந்தி எடுக்க முயற்சி செய்த்துள்ளார். அப்போது எதிர் திசையில் வந்துகொண்டிருந்த ட்ராக்டர் ஒன்று சிறுமியின் தலையில் மோத, அடுத்த நொடியே தலை துண்டாகி தம்மன்னா துடிதுடித்து இறந்துள்ளார்.

இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகையில், "ஒரு நிமிடம் என்ன நடந்தது என்றே எங்களுக்கு தெரியவில்லை. திடீரென சிறுமியின் தாய் அலறி துடித்தார். அந்த இடம் முழுவதும் ஒரே இரத்தமாக இருந்தது. பின்னர்தான் எங்களுக்கு என்ன நடந்தது என்றே தெரியவந்தது. ஒரு வினாடியில் எல்லாம் முடிந்துவிட்டது.. பாவம் இப்படி ஒரு மரணம் யாருக்கும் வரக்கூடாது" என்று மிரட்சியிலிருந்து மீளாமல் சம்பவத்தை விளக்கினார்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.