7ம் வகுப்பு தேர்வுக்குத் தயாராகி வரும் 105 வயது மாணவி..! 10 ஆம் வகுப்பு தேர்வை எழுதப்போவதாகவும் சவால்.!

7ம் வகுப்பு தேர்வுக்குத் தயாராகி வரும் 105 வயது மாணவி..! 10 ஆம் வகுப்பு தேர்வை எழுதப்போவதாகவும் சவால்.!



105 years old lady writing 7th standard exam

105 வயது பாட்டி ஒருவர் 7 ஆம் வகுப்பு தேர்வு எழுதும் சம்பவம் நெகிழ்ச்சியையும் பலரது பாராட்டையும் பெற்றுவருகிறது. கேரள மாநிலத்தில் முதியோர் திட்டத்தில் வயது முதிர்ந்த மூதாட்டிகள் பலரும் படித்து வருகின்றனர்.

இந்த திட்டத்தில் 105 வயதான கொல்லம் பகுதியைச் சேர்ந்த பாகீரதி அம்மா என்ற பாட்டியும் படித்து வருகிறார். தற்போது 4 ஆம் நிலை தேர்வு எழுதி வெற்றிபெற்றுள பாகீரதி பாட்டி அடுத்ததாக 7 ஆம் வகுப்பு தேர்வு எழுத உள்ளாராம். 7 ஆம் வகுப்பு தேர்வில் வெற்றிபெற்ற பிறகு 10 ஆம் வகுப்பு தேர்வு எழுதவும் திட்டமிட்டுள்ளாராம் பாகீரதி அம்மா.

பாகீரதி அம்மா பற்றிய தகவல்களை அறிந்த பிரதமர் நரேந்திரமோடி தனது மன்கிபாத் நிகழ்ச்சியில் பாகீரதி அம்மாவின் தன்னம்பிக்கை, முதிய வயதிலும் கல்வியில் காட்டும் ஆர்வம் பற்றி பாராட்டி பேசியிருந்தார். பாகீரதி அம்மாவின் இந்த விடா முயற்சியும், தன்னம்பிக்கையும் பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.