உலகம் மருத்துவம்

உலகில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி எப்போது கிடைக்கும்.? தடுப்பூசி தயாரிப்பு நிறுவனத் தலைவர் தகவல்!

கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. நாடு முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை மற்றும் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிப்பதில் உலகம் முழுவதும் மும்முரமாக ஈடுபட்டு வந்த நிலையில், பல நாடுகள் தடுப்பூசி கண்டுபிடித்துள்ளன. இவை மனிதர்கள் மீதான பரிசோதனை முயற்சியில் இருக்கின்றன.

சர்வதேச அளவில் ஐந்து மருந்து நிறுவனங்களுடன் இணைந்து கொரோனா தடுப்பு மருந்து தயாரிக்கும் பணியில் சீரம் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் சீரம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அடர் பூனவாலா கூறுகையில், வரும் 2024ஆம் ஆண்டு வரை உலக மக்கள் அனைவருக்கும் தேவையான போதிய தடுப்பூசிகள் கிடைக்க வாய்ப்பில்லை என தெரிவித்துள்ளார்.

மேலும், குறைந்த காலத்தில் உலக மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பு மருந்து கிடைக்கும் அளவுக்கு மருந்து உற்பத்தியை மருந்து நிறுவனங்கள் உற்பத்தி செய்யவில்லை. இந்த உலகத்தில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி கிடைப்பதற்கு நான்கு முதல் ஐந்து ஆண்டுகள் ஆகும் எனவும், கொரோனா தடுப்பூசியை உருவாக்க அஸ்ட்ராஜெனெகா மற்றும் நோவாவாக்ஸ் உள்ளிட்ட ஐந்து சர்வதேச மருந்து நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து 100 கோடி டோஸ் அளவை உற்பத்தி செய்ய உறுதிபூண்டுள்ளது. அதில் பாதி இந்தியாவுக்கு அளிக்க உறுதியளித்துள்ளது என தெரிவித்துள்ளார். 


Advertisement