லெக்கின்ஸ் உடையால் ஏற்படும் பாதிப்புகள்.. பெண்களே உஷார்., மொத்த வாழ்க்கைக்கும் பேராபத்து.!

லெக்கின்ஸ் உடையால் ஏற்படும் பாதிப்புகள்.. பெண்களே உஷார்., மொத்த வாழ்க்கைக்கும் பேராபத்து.!


 Vulnerability Defects about Wearing Leggings Type Dress Tamil

இன்றுள்ள காலத்தில் பேஷன், நாகரீகம் என்று பல்வேறு பெயர்களில் நல்ல வாழ்க்கைமுறையை வெகுவாக இழந்து, பல்வேறு உடல்நல பாதிப்புகளால் அவதிப்பட்டு வருகிறோம். இதனை தெரிந்து, தெரியாமலும் நாம் இயல்பாக செய்ய தொடங்கிவிட்ட நிலையில், அதனால் வரும் விளைவுகளை எதிர்கால வாழ்க்கையில் பெரும் இழப்பாக சந்திக்க தொடங்குகிறோம் என்பதே நிதர்சனம். 

பெண்கள் இன்றளவில் லெக்கின்ஸ் போன்ற இறுக்கமான உடைகளை அணிவதை வாடிக்கையாக்கியுள்ளனர். லெக்கின்ஸ் உடைகள் சருமத்திற்கு பல்வேறு பாதிப்பை ஏற்படுத்தும். சரும வறட்சி, உடல் வெப்பம் மற்றும் பிறப்புறுப்பு நோய்த்தொற்று அபாயம் போன்றவற்றை எளிதில் ஏற்படுத்தும். இறுக்கமான ஆடைகளை அணிவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து இன்று விரிவாக காணலாம். 

Vulnerability

இரத்த ஓட்டம்: 

லெக்கின்ஸ் போன்ற உடைகளை அணியும்போது, கால்களுக்கு பொருத்தமாக இருப்பது போல தோன்றினாலும், அதனை தொடர்ந்து அணிந்து வந்தால் கால் பகுதிகளில் இறுக்கம் ஏற்பட்டு, அங்குள்ள செல்கள் சுவாசிக்க இயலாத சூழ்நிலை ஏற்படும். இறுக்கம் தொடர்ந்து அதிகரிக்கும் பட்சத்தில், இரத்த ஓட்டத்தில் பாதிப்பு ஏற்பட்டு சரும பாதிப்பு ஏற்படும். இதனால் தொடை நரம்புகளில் அழுத்தம் ஏற்பட்டு, உணர்ச்சியற்ற தன்மையை ஏற்படுத்தும். 

உரோம வளர்ச்சி: 

இறுக்கமான உடைகளை அணிவதால் முடி வளர்ச்சியிலும் பாதிப்பு ஏற்படுகிறது. உரோமம் வேர்க்கால்களில் இருந்து மேல்நோக்கி வளர்கிறது. இறுக்கமான ஆடைகளை அணிந்தால் உரோமம் நேராக வளராமல், பக்கவாட்டு பகுதியில் அல்லது சுருண்ட நிலையில் வளர்கிறது. இதனால் உரோம வளர்ச்சி பாதிக்கப்பட்டு, நோய்க்கொப்புளம் ஏற்படலாம்.  ம்.

படர்தாமரை பிரச்சனை: 

பல சரும பிரச்சனைகளுக்கு உடல் சூடு முக்கிய காரணமாக அமைகிறது. இறுக்கமான உடைகள் உடல் சூடை வெளியேற்ற இயலாத வகையில் தடுப்பதால், உடலில் சுரக்கும் வியர்வையும் தங்கி அரிப்பு, சருமம் சிவத்தல் போன்ற பிரச்சனையை ஏற்படுத்துகிறது. இவை பின்னாளில் படர் தாமரை பிரச்சனையை ஏற்படுத்தும். படர் தாமரையால் அரிப்பு கடுமையான வேதனையை ஏற்படுத்தும். 

Vulnerability

சரும வறட்சி: 

இறுக்கமான உடைகள் மற்றும் உள்ளாடைகளை அதிக நேரம் அணிவதால், உடலின் ஈரப்பதம் குறைந்து சரும வறட்சி ஏற்படும். இதனால் தடிப்பு ஏற்பட்டு, பின்னாளில் புண்களாகவும் மாறும். லெக்கின்ஸ் போன்ற உடைகளை உடுத்தினால், வீட்டிற்கு வந்ததும் அவற்றை கழற்றி குளித்துவிட்டு பிற வேளைகளில் இறங்குவது நல்லது.

பூஞ்சை: 

லெக்கின்ஸ் போன்ற உடைகளால் சிலருக்கு திடீர் கொப்புளங்கள் ஏற்படும். இவை அணிந்த முதல்நாளே ஏற்படாது எனபதால், வெப்பத்தினால் ஏற்பட்டு இருக்கும் என எண்ணியிருப்போம். நமது உடலில் உள்ள வெப்பம் வெளியேறாமல், சூழ்நிலை தட்பவெப்பமும் சேர்ந்து அதனை ஏற்படுத்துகிறது. கொப்புளங்களில் பாக்டீரியா மூலமாக பூஞ்சை தொற்றும் ஏற்படலாம். 

ஈஸ்ட் தொற்று: 

ஈஸ்ட் வெப்பமான இடங்களில் நன்கு வளர்ச்சி அடையும் தன்மை கொண்டவை ஆகும். லெக்கின்ஸ் உடைகள் வெப்பத்தை ஏற்படுத்தி, அவை வளர்வதற்கு வாய்ப்புகளை வழங்குகிறது. லெக்கின்ஸை நாள் முழுவதும் அணிவது மிகப்பெரிய உடல்நல பிரச்சனையை ஏற்படுத்தும். முக்கியமாக பிறப்புறுப்பு பகுதிகளில் ஈஸ்ட் பூஞ்சை தொற்றை ஏற்படுத்தும். உடல் பாகத்தை மறைக்க இறுக்கமாக லெக்கின்ஸ் அணிந்து, உள்ளாடை என்ற பெயரில் பிரா மற்றும் கீழாடையையும் இறுக்கமாக அணிந்தால், உடலின் பாகத்திற்கு காற்று செல்ல வழியில்லாமல் கட்டாயம் அது பெரும் விபரீதத்தை ஏற்படுத்தும்.

Vulnerability

அரிப்பு: 

லெக்கின்ஸ் உடையை அணிந்து யோகா செய்வதால் வெயியேறும் வியர்வை உடைக்குள் படிந்து நோய்த்தொற்றை ஏற்படுத்தும். லெக்கின்ஸ் அணிந்து உடற்பயிற்சி கட்டாயம் மேற்கொள்ள வேண்டும் என்ற நிலையில், அதனை உடனடியாக மாற்றுவது நல்லது. உடையை மாற்றிவிட்டு கை, கால்களை சுத்தம் செய்து குளிக்கலாம். இதனால் பூஞ்சை தொற்று அபாயம் குறையும். 

முகப்பருக்கள்: 

முகப்பருக்கள் என்பது ஏற்பட பல காரணம் இருந்தாலும், இறுக்கமான உடைகளை அணியும் போது வியர்வை வெளியேறாமல், சருமத்தில் படிந்து முகப்பருவாக மாறுகிறது. 

இதனைப்போல, லெக்கின்ஸ் அணிந்து ஒருசில யோகா செய்யும் போது, அதனால் ஏற்படும் இறுக்கம் செரிமான அமைப்பை பாதிக்கும். உடலின் தசைகள் இறுக்கம் அடைந்து, உடல் தோற்றத்தில் மாற்றம் ஏற்பட்டு உடலெடை அதிகரிக்கவும் லெக்கின்ஸ் உடை காரணமாக அமைகிறது.