கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 2 பேருக்கு பக்க விளைவு.!

கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. உலகை அச்சுறுத்தி வரும் கொரோனவுக்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்க மருத்துவ வல்லுநர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். பல்வேறு நாடுகளில் தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு சோதனை அளவில் நடைபெற்று முன்னேற்ற பாதையில் சென்று வருகிறது.
இங்கிலாந்தில் கொரோனா தடுப்பூசியை பொதுமக்களுக்கு செலுத்தும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் முதற்கட்டமாக கொரோனா தடுப்பு முன்களப் பணியாளர்கள், முதியவர்கள் மற்றும் நோய் பாதிப்பு அதிகம் உள்ளவர்களுக்கு இந்த தடுப்பூசியை செலுத்தும் பணி தொடங்கியது. இதில் முதற்கட்டமாக தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் சுகாதாரப் பணியாளர்கள் 2 பேருக்கு அலர்ஜி ஏற்பட்டுள்ளது.
பொதுவாகவே தடுப்பூசி போடுவதால் சிலருக்கு இதுபோன்ற பக்க விளைவுகள் ஏற்படுவது இயல்பு. எனவே இதனால் பெரிய அளவில் பாதிப்புகள் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தடுப்பூசியால் அலர்ஜி ஏற்பட்ட 2 சுகாதார பணியாளர்களுக்கும், ஏற்கனவே அலர்ஜி பிரச்சினை இருந்துள்ளதாகவும், இதனால் அவர்களுக்கு மாற்று மருந்து கொடுக்கப்பட்டது எனவும் தெரிவித்துள்ளனர்.