விஜய்யின் 'தளபதி 68' ஹாலிவுட் படத்தின் ரீமேக்? வெளியான தகவல்.!

விஜய்யின் 'தளபதி 68' ஹாலிவுட் படத்தின் ரீமேக்? வெளியான தகவல்.!



Thalapathi 68 movie remake of Hollywood

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான தளபதி விஜய் லியோ படத்திற்கு பிறகு, இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகர் விஜய் உடன் மீனாட்சி சவுத்ரி பிரபுதேவா பிரசாந்த் மோகன் ஜெயராம் சினேகா உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் நடிக்கின்றனர்.

vijay

இந்த திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு தாய்லாந்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் தளபதி 68 திரைப்படம் ஹாலிவுட் படத்தின் ரீமேக் என கூறப்படுகிறது. அதன்படி 2012 ஆம் ஆண்டு வெளியான லூப்பர் என்ற திரைப்படத்தின் ரீமேக் என கூறப்படுகிறது. 

vijay

மேலும், இந்த படத்துக்காக இயக்குனர் வெங்கட் பிரபு விஜய்யிடம் நான்கு டைட்டில்களை கொடுத்ததாகவும், அதில் ஒரு டைட்டிலை விஜய் செலக்ட் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.