பிக்பாஸ் ஷிவானிக்கு என்ன தான் ஆச்சு.?! அடையாளமே தெரியாமல் உருக்குலைந்த நடிகை.!
புத்துணர்ச்சி ஊட்டும் மாதுளம் பழச்சாறு... தினமும் குடிச்சு பாருங்க உங்க முகம் பளபளப்பாக மின்னும்...!
ஏதாவது ஒரு பழத்தை தினமும் எடுத்துக் கொள்வது ஆரோக்கியத்திற்கு நல்லது. நமது உடலுக்கு தேவையான புத்துணர்ச்சியையும் சக்தியையும் தரும் பழங்களில் ஒன்று மாதுளை.
தினமும் ஒரு மாதுளம் பழத்தை சாப்பிட்டு வருவது நம்முடைய ரத்த ஓட்டத்தை சீராக வைத்திருக்க உதவுகிறது ஹீமோகுளோபினை மேம்படுத்துகிறது மாதுளம் பழத்தை உரித்து அதனுடைய விதைகளை அப்படியேவும் சாப்பிடலாம் அல்லது அதை ஜூஸ் ஆக அடித்தும் குடிக்கலாம்.
மாதுளை சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் தெரிந்து வைத்திருக்கும் பலருக்கும், பழமாக சாப்பிடுவதற்கும், ஜூஸாக குடிப்பதற்கும் என்ன வித்தியாசம்? என்ற கேள்வி இருக்கும். அது குறித்த தகவலை இங்கே தெரிந்து கொள்ளலாம்.
மாதுளை பழத்தில் பொட்டாசியம் நிறைந்து காணப்படுகிறது. இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தி, உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இதயத்தைப் பாதுகாக்க மாதுளை ஜூஸை தினமும் குடிக்கலாம்.
மாதுளை பழத்தில் அந்தோசயனின் எனப்படும் ஆன்டிஆக்ஸிடன்ட் உள்ளது. இது ஆக்ஸிஜனேற்றத்தை உட்கொள்வது சில புற்றுநோய்களின் அபாயத்தை குறைக்கலாம். எனவே, தினமும் மாதுளை சாறு உட்கொள்வது மூலம் உங்கள் ஆரோக்கியம் மேம்படும்.
வயதானவர்களுக்கு மாதுளம் பழம் சாறு புத்துணர்ச்சியையும் தேக மேம்பாட்டையும் கொடுக்கும். எனவே அவர்களுக்கு மாதுளம்பழம் சாற்றை அடிக்கடி கொடுத்து வருவது நல்லது. மேலும் மாதுளம்ஜூஸைக் கொடுத்தால் நினைவாற்றல் மேம்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. புத்துணர்ச்சியாகவும் இருப்பார்கள்.