பளபளப்பான சருமம் வேணுமா தினமும் ஒரு பப்பாளி சாப்பிடுங்கள்..! இன்னும் என்னென்ன பலன் கிடைக்கும்னு தெரிஞ்சுக்கலாம் வாங்க..!

பளபளப்பான சருமம் வேணுமா தினமும் ஒரு பப்பாளி சாப்பிடுங்கள்..! இன்னும் என்னென்ன பலன் கிடைக்கும்னு தெரிஞ்சுக்கலாம் வாங்க..!


papaya-fruits-benefits-are-here-out-and-out

பல்வேறு பலன்களை கொடுக்கும் பப்பாளி பழம் குறித்தும் அதன் மருத்துவ குணங்களை குறித்தும் இங்கே காண்போம்.

பப்பாளி பழம் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டது. மேலும் விலை குறைவான பழமாகும். எனவே இனி உங்கள் அதிகாலை உணவாக பப்பாளியை சேர்த்துக்கொள்ளலாம். அதன் மூலம் பல ஆரோக்கிய நன்மைகளை நீங்கள் பெற முடியும்.

வைட்டமின்-ஏ குறைபாடு உள்ளவர்கள் கண்டிப்பாக பப்பாளி பழம் உண்ண வேண்டும். ஏனெனில் பப்பாளி பழத்தில் வைட்டமின் ஏ, கால்சியம் மற்றும் பொட்டாசியம் அதிகமாக உள்ளது.

பல் சம்மந்தமான குறைபாட்டிற்கும், சிறுநீர்ப்பையில் உண்டாகும் கல்லை கரைக்கவும், பப்பாளி சாப்பிட்டால் போதும். மேலும் நரம்புகள் பலப்படவும், ஆண்மை தன்மை பலப்படவும், ரத்த விருத்தி உண்டாகவும், ஞாபக சக்தியை உண்டு பண்ணவும் பப்பாளி பழத்தினை சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.

Papaya

மலச்சிக்கல் பிரச்சனைக்கு இந்த பழத்தை சாப்பிடுவது சிறந்த பலனை கொடுக்கும். இது மலச்சிக்கலை நீக்கி, செரிமானத்திற்கு உறுதுணையாக இருக்கும். பப்பாளி பழத்தில் குறைவான கலோரிகளும், அதிகமான ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளது.

செரிமானத்திற்கு உதவி செய்வதால், இது உடல் எடையை குறைக்கவும் உதவும். முகப்பரு உள்ளவர்கள், பப்பாளிக்காயின் நறுக்கிய உட்பகுதித் துண்டுகளை மென்மையாக முகத்தில் தேய்க்க வேண்டும். இது முகப்பருக்களைப் போக்கி, முகச் சுருக்கங்களையும் நீக்கி, பொலிவு கூட்டும் பப்பாளிப்பழம்.