வாயை சுற்றிலும் கருமையா.? இதை செய்தால் போதும்.. பளீரென ஆகிவிடும்.!



mouth hyper pigmentation solution

சில பெண்களுக்கு வாயை சுற்றிலும் வட்டமாக, கருமையாக அடர் நிறத்தில் இருக்கும். சூரிய கதிர்களின், அதீத தாக்கதின் மூலம் ஏற்படும் மெலனின் உற்பத்தியின் காரணமாக இந்த விளைவு ஏற்படுகிறது. முகத்தை சுற்றி முகக்கவசம் இன்றி, வெயிலில் வெளியே செல்கையில் ஏற்படும் இந்த கருமை நாள்பட நாள்பட சரியாக கவனிக்கவில்லை எனில், கருமை நிறத்தில் மாறிவிடுகிறது.

hyper pigmantation

மேலும், வைட்டமின் பி12 மற்றும் இரும்புசத்து, குறைபாட்டினாலும் இந்த பிரச்சனை ஏற்படலாம். நம் வீட்டில் இருக்கும் இயற்கை பொருள்களை வைத்தே நாம் இவற்றிக்கு தீர்வு காணலாம் .அது எப்படியென பார்க்கலாம் வாங்க.!

இதையும் படிங்க: மூக்கு பகுதியில் கருப்பு புள்ளிகள் இருக்கா? அகற்ற செய்ய வேண்டியது என்ன? டிப்ஸ் உள்ளே.!

சிறிதளவு கடலை மாவு, மஞ்சள் தூள், மற்றும் பால் அல்லது தயிர் சேர்த்து நன்றாக கலக்கி பேஸ்ட் செய்து முகத்தில் அந்த கலவையை தடவி, காய்ந்ததும் கழுவி விடலாம். இது சருமத்தை நன்றாக சுத்தம் செய்து, அழுக்கினை நீக்கி நிறத்தை மேம்படுத்தும்.

hyper pigmantation

உருளைக்கிழங்குத் துண்டுகளை நன்றாக வெட்டி , வாய் பகுதியைச் சுற்றி மெதுவாக தேய்க்கலாம். அல்லது ,உருளைக்கிழங்கினை நன்றாக அரைத்து அந்த கலவையினை கூட தேய்க்கலாம். இதில், உள்ள வைட்டமின் சி அடர் கருமை நிறத்தைக் குறைக்க உதவும்.

வீட்டில் வளர்க்கும் கற்றாழையை வெட்டி அவற்றின் ஜெல்லை மட்டும் தனியாக எடுத்து, வாய் பகுதியைச் சுற்றி தடவி 20-30 நிமிடங்கள் கழித்து,சிறிது நேரத்தில் கழுவினால் வாயை சுற்றியுள்ள கருமை நீங்கும்.

இதையும் படிங்க: கிட்னி ஆரோக்கியமாக இருக்க இந்த 5 பழங்களை சாப்பிட்டு பாருங்க..! செம ரிசல்ட் கிடைக்கும்..!!