தமிழகத்தில் மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு.! வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு.!

தமிழகத்தில் மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு.! வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு.!


Medical counseling in tamilnadu

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ் படிப்புக்கான கலந்தாய்வு இன்று முதல் 12ஆம் தேதி வரை ஆன்லைனில் மாணவர்கள் பதிவு செய்யலாம் என மருத்துவ படிப்பு சேர்க்கைக்கான அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. வருகின்ற 12ஆம் தேதி வரையில் www.tnmedicalselection.net என்ற இணையதளம் மூலமாக மாணவர்கள் அனைவரும் விண்ணப்ப பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும்,  7.5 சதவீத உள்ஒதுக்கீடு மாணவர்கள் அனைவரும் தனி விண்ணப்பம் குறிப்பிட்ட அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது. நவம்பர் 16-ல் வரிசை பட்டியல் வெளியீட்டுக்கு பிறகு எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ் படிப்புக்கான கலந்தாய்வு தேதி அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

mbbs

விண்ணப்ப பதிவு tnmedicalselection.org  என்ற இணையத்தில் நவம்பர் 12-ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் எனவும், tnhealth.tn.gov.in என்ற இணையதள முகவரியில் மருத்துவ கலந்தாய்வுக்கான தேதிகள் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.