தின்னத் தின்னத் திகட்டாத மாம்பழத்தை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க...!

தின்னத் தின்னத் திகட்டாத மாம்பழத்தை பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க...!


Let's find out about the unripe mango to buy

முக்கனிகளில் முதல் கனி மாங்கனி. தின்ன் தின்ன திகட்டாத பழம் இந்த மாம்பழம். எவ்வளவு சாப்பிட்டாலும் போதுமென்று சொல்ல மனசே வராது. மாம்பழத்தை பிடிக்காது என்று யாருமே சொல்ல மாட்டார்கள்.வெயில் காலம் வந்துவிட்டாலே நமக்கு பிடித்த மாம்பழ சீசனும் வந்துவிடும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் பழம் இது.

இளம் வயதில் நமது தோலில் ஈரப்பதம் அதிகம் இருப்பதால் தோல் சுருக்கமில்லாமல் இருக்கிறது. வயது அதிகமாகும் போது இந்நிலை நீடிக்காது. நடுமத்திய வயதில் இருப்பவர்கள் மாம்பழத்தை சாப்பிடுபவர்களுக்கு தோல் சுருக்கம் நீங்கி தோல் பளபளப்பாகும்.

மாம்பழத்தை சாப்பிடுவதால், இதில் அமிலேஸ் எனப்படும் செரிமான நொதிகளை கொண்டுள்ளது. பெரிய உணவு மூலக்கூறுகள் செரிமான நொதிகளால் உடைக்கப்படுகின்றன, இதனால் அவை உங்கள் உடலால் எளிதில் ஜீரணிக்கப்படும். மேலும், மாம்பழத்தில் நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற செரிமான பிரச்சனைகளுக்கு இது உதவும்.

பெண்களுக்கு மாதந்தோறும் ஏற்படும் ஒரு இயற்கை நிகழ்வு மாதவிடாய் ஆகும். மாம்பழங்களை சாப்பிட்டு வரும் பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனைகள் சீராகி, கருப்பையில் இருக்கும் தீங்கான கழிவுகள் நீங்கும். பெண்களின் உடல்நலம் மேம்படும்.

இயற்கையாகவே மாம்பழம் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்க உதவி செய்யும்.