விளையாட்டு

கடைசி இரண்டு ஓவரில் தோனியாக மாறிய ஜடேஜா! கொல்கத்தாவின் பிளே ஆப் வாய்ப்பை மங்க வைத்த சிஎஸ்கே.!

Summary:

நேற்றைய ஆட்டத்தில் சென்னை அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வெற்றி பெற்றது.

துபாயில் நடைபெற்று வரும் 13வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 49வது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் இடையே நடைபெற்றது. நேற்றைய ஆட்டம் துபாய் மைதானத்தில் நடைபெற்றது. நேற்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

சென்னை அணி ஏற்கனவே பிளே ஆப் வாய்ப்பை இழந்துவிட்டது. ஆனால், கொல்கத்தா அணியைப் பொறுத்தவரை நேற்றைய போட்டியில் வெற்றி பெற்றால் தான் எளிதாக பிளே ஆப் வாய்ப்பை தக்க வைத்து கொள்ள முடியும் என்ற சூழ்நிலை இருந்தது. நேற்றைய ஆட்டத்தில் எப்படியாவது வெற்றி பெறவேண்டும் என்ற முனைப்புடன் களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் குவித்தது. 

இதனையடுத்து 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணிக்கு துவக்க வீரர் வாட்சன் 14 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தோனியும் 1 ரன் எடுத்தநிலையில் வெளியேறினார். துவக்க வீரராக களமிறங்கி அதிரடியாக ஆடிய ருதுராஜ் கெயிக்வாட் 53 பந்துகளில் 72 ரன்கள் எடுத்தநிலையில் அவுட் ஆகினார்.

சென்னை அணியின் வெற்றிக்கு இறுதி 2 ஓவரில் 30 ரன்கள் தேவை என்ற இக்கட்டான சூழ்நிலை இருந்தது. அப்போது ஜடேஜா பெர்குசன் வீசிய 19வது ஓவரில் 2 போர், 1 சிக்ஸ் அடித்து 19 வது ஓவரில் மட்டும் சென்னை அணி 20 ஓட்டங்கள் எடுத்தது. இதனால் கடைசி ஓவரில் சென்னை அணிக்கு 10 ரன்கள் மட்டுமே தேவை என்ற சூழ்நிலை இருந்தது. 

இறுதி ஓவரில் ஜடேஜா அசத்தலாக 2 சிக்ஸர் அடித்து சென்னை அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த தோல்வியின் மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பிளே ஆப் வாய்ப்பு மங்கியுள்ளது. இறுதியில் கூலாக தோனி வின்னிங் சாட் அடிப்பது போலவே நேற்றைய ஆட்டத்தில் ஜடேஜா ஆடினார் என ரசிகர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.


Advertisement