உடலுக்கு பல நன்மையளிக்கும் வெண்டைக்காய் ஸ்டஃப்.. வீட்டிலேயே அருமையாக செய்து அசத்துங்கள்..!!



How to prepare healthy vendaikai stuff

சந்தைகளில் எளிதாக கிடைக்கும் வெண்டைக்காயில் இருக்கும் கொழகொழப்பு தன்மை நமது உடலுக்கு பல நன்மைகளை அளிக்கிறது. அதில் பல மருத்துவ குணங்கள் இருக்கின்றன. இன்று வெண்டைக்காயை வைத்து ஸ்டஃப் செய்வது எப்படி என காணலாம்.

தேவையான பொருட்கள் : 

★வெண்டைக்காய் - 250 கிராம் 

★தேங்காய் - சிறிதளவு 

★கடலை மாவு - 4 தேக்கரண்டி 

★கொத்தமல்லி - சிறிதளவு 

★பூண்டு - இரண்டு பல் 

★பச்சை மிளகாய் - இரண்டு 

★இஞ்சி - சிறிதளவு 

★வெங்காயம் - ஒன்று 

★எண்ணெய் - ஆறு தேக்கரண்டி 

★தனியா பொடி - ஒரு தேக்கரண்டி  

★சீரக பொடி - ஒரு தேக்கரண்டி 

★சீரகப்பொடி - ஒரு தேக்கரண்டி 

★மஞ்சள் பொடி - அரை தேக்கரண்டி 

★மிளகாய்ப்பொடி - ஒரு தேக்கரண்டி 

★உப்பு - தேவையான அளவு

செய்முறை :

★முதலில் எடுத்துக்கொண்ட பச்சை மிளகாய், கொத்தமல்லி, வெங்காயம், இஞ்சி போன்றவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பூண்டு, கொத்தமல்லி, தேங்காய், இஞ்சி, மிளகாய் போன்றவற்றை கடலை மாவுடன் அரைத்து நன்றாக கலக்கி எடுத்துக்கொள்ள வேண்டும். 

★பின் மஞ்சள் பொடி, சீரகப்பொடி, உப்பு, மிளகாய் பொடி போன்றவற்றையும் சேர்த்து கொள்ளலாம். அடுத்து வெங்காயம் சேர்த்து இந்த கலவையை வெண்டைக்காய்க்குள் பிளந்து அடைக்க வேண்டும். 

★விதைகள் உள்ளே மூடி இருந்தால் எடுத்துவிட்டு அதனை அடைக்கவும். பின்னர் கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், வெண்டைக்காயை போட்டு பொன்னிறமாக வதக்கி எடுத்தால் சுவையான வெண்டைக்காய் ஸ்டஃப் தயார்.