புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
வெறும் கொய்யா இலையில்.. இவ்வளவு விஷயமிருக்கா.?! இத்தனை நாளாக தெரியாம போச்சே.?!
மருத்துவ குணங்களை அள்ளித்தரும் கொய்யா இலை
நமக்கு எளிதில் கிடைக்கும் சில மருத்துவமிக்க மூலிகைகளை நாம் பயன்படுத்துவதில்லை. அத்தகைய மருத்துவ குணமிக்க கொய்யா இலையின் பயன்களைப் பற்றி இப்பதிவில் காண்போம்.
உடல்நலத்தை பாதுகாக்கும் கொய்யா இலை
கொய்யா இலையில் அநேக மருத்துவப் பயன்கள் உள்ளது. கொய்யா இலை சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இதன் பயன்களை பற்றி காண்போம்.
கொய்யா இலை வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்தது.
கார்போஹைட்ரேட்டுகள் சர்க்கரையாக மாறுவதைத் தடுத்து உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.
கொய்யா இலை செரிமான கோளாறுகளை சரி செய்கிறது.
நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது.
பல் வலி நீங்க கொய்யா இலையை மென்று சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும். மேலும், இது பல் ஈறுகளையும் வலுவாக்கும்.
சரும அழகை மேம்படுத்தும் கொய்யா இலை
சுற்றுச்சூழல் மாசுபாடு காரணமாக சருமத்தில் பருக்கள் வருகிறது. அதனை சரி செய்யவும் கொய்யா இலையைப் பயன்படுத்தலாம்.
கொய்யா இலையை பேஸ்ட் போல அரைத்து முகத்தில் பூசி வர பருக்கள் மறையும். மேலும், பருக்களால் வந்த தழும்புகளை கூட மறைய வைக்கும்.
கொய்யா இலையை அரைத்து உடல் முழுக்க தேய்த்து குளித்து வர தோல் சம்மந்தப்பட்ட பல்வேறு நோய்களை அது சரி செய்யும்.
கொய்யா இலை சாறு எடுத்து முகத்தில் மசாஜ் செய்து அரை மணி நேரம் கழித்து முகத்தை கழுவி வர முகம் பிரகாசமாக மாறும்.
தலை முடி பிரச்சனைகளுக்கு உதவும் கொய்யா இலை பயன்கள்
தலை முடியில் அரிப்பு உள்ளவர்கள் கொய்யா இலையை அரைத்து தலையில் தேய்த்து ஒரு மணி நேரம் கழித்து தலை முடியை அலசி வர அரிப்பு நீங்கும்.
பொடுகு, பேன் தொல்லை இருப்பவர்கள் கொய்யா இலை ஹேர் மாஸ்க் பயன்படுத்தி வர நல்ல பலனைக் காணலாம். மேலும், இந்த ஹேர் மாஸ்க் பயன்படுத்தி வந்தால் முடி அடர்த்தியாகவும், செழிப்பாகவும் வளரும்.
இப்போது கொய்யா இலை கஷாயம் எப்படி செய்வது என்று பார்ப்போம்.
தேவையானப் பொருட்கள் :
கொய்யா இலை - 5 (இலை )
இஞ்சி -சிறிதளவு
சீரகம் -2 தேக்கரண்டி
மிளகு -1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - சிறிதளவு.
செய்முறை
முதலில் அடுப்பில் ஒரு பாத்திரத்தில் 2 டம்ளர் தண்ணீர் அதோடு மேலேக் கொடுக்கப்பட்ட அளவுகளின் படி கொய்யா இலை, இஞ்சி, சீரகம், மிளகு, மஞ்சள் தூள் ஆகியவை சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும். அந்த நீர் நன்றாக கொதித்து பாதியாக குறைந்து வரும்போது அதை வடிகட்டி இளஞ்சூட்டில் குடிக்கலாம்.
கொய்யா இலை கஷாயத்தின் பயன்கள்
கொய்யா இலையை கஷாயம் வைத்துக் குடித்து வர அது உடலில் உள்ள கொலஸ்ட்ராலைக் குறைத்து உடலை புத்துணர்ச்சி அடைய செய்யும்.
இந்த கஷாயம் ஒரு நல்ல ஆன்ட்டி ஆக்ஸிடென்ட் சத்துக்கள் நிறைந்தது. மேலும், நீரழிவு பிரச்சனைகளை சரி செய்யும்.
மேலும், இந்த கஷாயத்தை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், அது உடல் பருமனை குறைத்து ஆரோக்கியமான உடல் அமைப்பைத் தரும். மேலும் இந்த கசாயம் சளி, இருமல் உள்ளிட்ட மழைக்கால வியாதிகளை குணப்படுத்துவதுடன் தொண்டை புண்ணையும் சரி செய்யும்.