சமச்சீர் உணவு பழக்கத்திற்கு தினந்தோறும் ஒரு வாழைப்பழத்தை சாப்பிடுங்க: இதோட அருமை தெரிஞ்சா மிஸ் பண்ணவே மாட்டீங்க..!

சமச்சீர் உணவு பழக்கத்திற்கு தினந்தோறும் ஒரு வாழைப்பழத்தை சாப்பிடுங்க: இதோட அருமை தெரிஞ்சா மிஸ் பண்ணவே மாட்டீங்க..!



eat-a-banana-daily-for-a-balanced-diet

நமது அன்றாட உணவில் பழங்களை சேர்த்துக் கொள்வது அவசியம், அதிலும் தினந்தோறும் ஒரு வாழைப்பழத்தை சாப்பிடுவது உடல்நலத்திற்கு மிகவும் நல்லது.

ஆயுர்வேத மருத்துவத்தில், ஆரோக்கியத்திற்கு சுத்தமான பெருங்குடல் மிக அவசியமானதாக கருதப்படுகிறது. அதிக நார்ச்சத்து உள்ளதால் வாழைப்பழத்தை தினந்தோறும் உணவில் சேர்த்துக்கொள்வதால் உங்கள் குடல் இயக்கம் சீராக இருக்க உதவும்.

கிராண்ட் நைன், கற்பூரவள்ளி, நேந்திரன், பச்சநதன், பூவன், செவ்வாழை, ரஸ்தாலி, ரோபஸ்டா, மலை வாழைப்பழம், பேயன் பழம், மொந்தம் பழம், மட்டி பழம், ஏலக்கி என்று எண்ணற்ற வகைகளில் கிடைக்கும் வாழைப்பழம் நமது உணவு பழக்கவழக்கத்தை சீராக்குகிறது.

வாழைப்பழத்தில் வைட்டமின்-ஏ, வைட்டமின்-பி 6, வைட்டமின்-சி, மெக்னீசியம் மற்றும் நார்ச்சத்து ஆகியவை நிறைந்துள்ளன. தினந்தோறும் ஒரு பழுத்த வாழைப்பழம் சாப்பிடுவது மன அழுத்தம் மற்றும் இதய நோய்கள் வரும் வாய்ப்புகளைக் குறைக்கிறது.

நன்கு பழுத்த ஒரு வாழைப்பழத்தில் மனித உடலில் எலும்புகளையும் தசைகளையும் உற்பத்தி செய்யும் பொட்டாசியம் 11% நிறைந்துள்ளது. இந்த பழத்தை தினமும் தவறாமல் சாப்பிட்டு வருபவர்களுக்கு  இரத்த அழுத்தம், சிறுநீரகக் கற்கள், முழங்கால் வலி மற்றும் இதய நோய்கள் வராமல் தடுக்கும்.

உடலில் புற்று நோய் செல்கள் உருவாவதை வாழைப்பழம் தடுக்கும் என்று மருத்துவ அறிவியல் கூறுகிறது. ஒரு பழுத்த வாழைப்பழத்தில் சரியான அளவு ஆன்டி ஆக்சிடென்ட் மூலக்கூறுகள் சர்க்கரை நோய், இதய நோய் மற்றும் வலிப்பு போன்ற நரம்பு அழற்சி குறைபாடுகளை தடுக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

இன்றைய சவாலான காலகட்டத்தில் நோய் எதிர்ப்பு சக்தி வாழ்வுக்கும் சாவுக்கும் இடையில் பெரிய வித்தியாசத்தை கொடுக்கும். வாழைப்பழங்கள் நுண்ணுயிர் கலந்த உணவு வகையை சேர்ந்தது, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியில் நேரடி தாக்கத்தை வாழைப்பழம் ஏற்படுத்தும். இது நமது குடலில் நுண்ணுயிர்கள் (பாக்டீரியா) உருவாக உறுதுணையாக இருக்கிறது.