எடையை குறைக்க புளி உதவுகிறதா? அடடே இது புது தகவலா இருக்கே..!!

எடையை குறைக்க புளி உதவுகிறதா? அடடே இது புது தகவலா இருக்கே..!!


Does tamarind help in weight loss? Wow this is new information..!!

புளியை உணவில் சேர்த்துக்கொள்ளும் போது, உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. இன்சுலின் அளவைக் குறைத்து ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துகிறது. மேலும் செரிமான தன்மையை அதிகரிக்க உதவுகிறது. வயிற்றுப் புண்களை ஆற்றவும், கொழுப்பைக் கரைத்து, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தி ஆற்றலை அதிகரிக்கவும், உடலில் உள்ள நச்சுகளை நீக்கி, எலும்புகளை வலுப்படுத்தவும், தூக்கத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. 

புளியில் உள்ள வைட்டமின் சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிகிறது. நம்முடைய பாரம்பரிய சமையலில் 'புளி' முக்கிய பங்கு வகிக்கிறது. அறுசுவைகளில் ஒரு சுவை புளிப்பு சுவை. அன்றாட உணவில் புளியை சேர்த்துக்கொண்டால் ஜீரண சக்தி அதிகரிக்கும் என்பதால் ரசம் இல்லாத விருந்தை நாம் கொண்டாடுவதே இல்லை. புளி உடல் எடையை குறைத்து, சீராக பராமரிக்க உதவும் என்பது நம்மில் பலர் அறிந்திராத அறிவியல் பூர்வ உண்மை. மேலும் புளியில் கொழுப்பு சத்து குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும், இருக்கும். எனவே இது உடல் எடையை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. 

தினமும் புளியை உணவில் சேர்ப்பதால், வயிற்று உபாதைகள் சீராகி வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும். உடல் எடையை புளி எவ்வாறு குறைக்கிறது என்பதற்கான சில அறிவியல் காரணங்கள் பின்வருமாறு, புளியில் இருக்கும் 'ஹைட்ராக்ஸிசிட்ரிக் அமிலம் கொழுப்பை எரித்து சக்தியாக மாற்றி பசியை அடக்குகிறது. கொழுப்பை உருவாக்கும் 'சிட்ரேட் லைஸ்' என்ற நொதியின் உற்பத்தியை தடுக்கிறது.
இதில் இருக்கும் பிளேவனாய்டு மற்றும் பாலிபினால், உடல் செயல்பாடுகளைத் தூண்டி அதிக எடையை குறைக்க உதவுகிறது. நார்ச்சத்து பசியை குறைத்து, ஆரோக்கியமற்ற உணவுகள் மீதான ஆசையை குறைக்கிறது. 

உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை அவ்வப்போது உடலில் இருந்து வெளியேற்றி, ஆரோக்கியமாக உடலை வைத்திருக்க உதவுகிறது. பிளேவனாய்டு கெட்டக் கொழுப்பைக் குறைக்கவும், நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கவும் உதவுகிறது. 
இதன் ஆண்டிசெப்டிக் பண்புகள் தொற்று நோயை குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது. புளி வகைகளில் கலப்பு இனத்தை சேர்க்காமல், நாட்டு வகை அல்லது மலபார் புளியை (குடம்புளி) சேர்த்துக்கொள்வதால் எளிதாக எடையை குறைத்து பலன்களை பெறலாம்.