கொரோனா தாக்கியவர்களிடம் இருந்து மற்றவர்களுக்கு தொற்று அதிகமாக பரவுவது எப்போது.?

கொரோனா தாக்கியவர்களிடம் இருந்து மற்றவர்களுக்கு தொற்று அதிகமாக பரவுவது எப்போது.?



Corona research

உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸ் தாக்கம் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. உலகின் பல நாடுகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கொரோனா பரவல் ஆரம்பித்ததில் இருந்து பல்வேறு நாடுகளிலும் வைரஸ் தொடர்பாக பல்வேறு ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

முதற்கட்டமாக தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து கொரோனாவில் இருந்து தப்பிக்க மக்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ளவேண்டும் என அனைத்து நாடுகளும் அறிவுறுத்தி வந்தது. இந்தநிலையில், கொரோனா தொற்றிலிருந்து தங்களை காப்பாற்றி கொள்ள பலரும் தடுப்பூசி போட்டுக்கொள்கின்றனர்.

coronaஇந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்று, ஒருவரை தாக்கிய பிறகு அவர் மூலம் எப்போது மற்றவர்களுக்கு அதிகளவில் பரவுகிறது என்பது தொடர்பாக சீனாவில் ஒரு ஆய்வு நடந்துள்ளது. இதுதொடர்பான முடிவுகள் "ஜாமா இன்டர்னல் மெடிசின்" என்ற பத்திரிகையில் வெளியாகியுள்ளது. இந்த ஆய்வில் சீனாவின் ஒரு பகுதியில் கடந்த ஆண்டு ஜனவரி முதல் ஆகஸ்டு வரையில். கொரோனா பாதித்தவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த 9 ஆயிரம் பேரை கண்டறிந்து ஆய்வு மேற்கொண்டுள்ளனர் ஆராய்ச்சியாளர்கள்.

இவர்களை கண்காணித்தபோது, 89 சதவீதத்தினர் மிகக்குறைவான, மிதமான பாதிப்புகளை கொண்டிருந்தது தெரிய வந்தது. 11 சதவீதத்தினர் அறிகுறியற்றவர்கள். ஒருவர் கூட தீவிரமாக பாதிக்கப்படவில்லை என்பது தெரியவந்தது. மேலும், கொரோனா பாதிக்கப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள், கொரோனா தொற்றுக்கு ஆளாக வாய்ப்பு உள்ளது என்பது உறுதியானது. கொரோனா பாதிப்புக்கு ஆளானவர்களுக்கு அறிகுறிகள் தெரியத்தொடங்குவதற்கு முந்தைய 2 நாட்களும், அறிகுறி தெரிந்த பின்னர் 3 நாட்களும், அவர்களால் மற்றவர்களுக்கு கொரோனா தொற்று பரவ வாய்ப்பு அதிகமாக உள்ளது என தெரிய வந்தது.