"வீடியோவை டெலிட் பண்ணு.. காசு தரேன்." insta பிரபலத்திடம் நடிகை நயன்தாரா பேரம்.!
வாழைப் பூவால் விளையும் அதீத நன்மைகள்; படித்து உபயோகித்து பயன் பெறுங்கள்
ஒரு வாழை மரத்தினால் மனிதர்களாகிய நமக்கு உண்டாகும் நன்மைகள் எண்ணிலடங்காதவை. இதற்கு காரணம் வாழை மரத்தின் அனைத்து பாகங்களும் நமக்கு ஏதோ ஒரு ஒருவிதத்தில் பயன்பட்டு கொண்டுதான் இருக்கின்றன. வாழை மரத்தில் காய்ந்துபோன நார் கூட பூ கட்டுவதற்கு பயன்படுத்தப்படும். இப்படி எல்லா வகையிலும் நமக்கு உதவுகின்றது வாழைமரம்.
இதனால்தான் நமது இல்லத்தில் நடைபெறும் சுப நிகழ்ச்சிகளில் முகப்பில் வாழை மரத்தை கட்டி வைக்கின்றனர். இந்த வாழை மரம் போல் நாமும் எல்லாவிதத்திலும் அனைவருக்கும் பயனுள்ளவராக வாழ வேண்டும் என்பதே இதன் கருத்து.
இப்படிப்பட்ட சிறப்பம்சங்களை கொண்ட வாழை மரத்தின் ஒரு பாகமான வாழைப்பூவின் நன்மைகளை பற்றி நாம் இங்கு காண்போம்.
மன அழுத்தத்தால் வரக்கூடிய வாயுத்தொல்லை, செரிமானக்கோளாறுகள், வயிற்றுப்புண் ஆகியவை ஆற தொடர்ந்து ஐந்து மாதங்கள் வாழைப்பூவை சமைத்து சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.
மூலநோய், இரத்தம் வெளியேறுதல், மூல புண்கள், மலச்சிக்கல், சீதபேதி போன்றவற்றிற்கு இந்த வாழைப்பூ சிறந்த மருந்தாக பயன்படுகிறது.
பெண்களை வாட்டி வதைக்கும் கர்ப்பப்பை கோளாறுகள், வெள்ளைப்படுதல், மாதவிடாய் கோளாறுகள் போன்றவற்றிற்கு இது மிகச்சிறந்த மருந்தாக அமைகிறது.
வாய் துர்நாற்றத்தால் நாம் சில சமயங்களில் பேசாமலே இருந்து விடுவோம். ஏனெனில் அது மிகுந்த அவமானத்தை தரக்கூடியது. வாய்துர்நாற்றம் நீங்கவும், வாய்ப்புண்கள் ஆறவும் வாழைப்பூவை சமைத்து சாப்பிடலாம்.
வாழைப்பூ வடை:
- வெங்காயம், கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- வாழைப்பூவை சுத்தம் செய்து விட்டு சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் மஞ்சள், உப்பு சேர்த்து கொர கொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
- துவரம் பருப்பினை 2 மணி நேரம் ஊற வைத்து தண்ணீரை வடித்தபின் அதனுடன் சோம்பு, சீரகம், மிளகாய் சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளவேண்டும்.(தண்ணீர் சேர்க்க வேண்டாம்)
- ஒரு பாத்திரத்தில் அரைத்த துவரம் பருப்பு, வாழைப்பூ, நறுக்கி வெங்காயம், கறிவேப்பிலையை, உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.
- கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை வடைகளாக தட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்
- சுவையான வாழைப் பூ வடை ரெடி. இதனை குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.