இந்தியா மருத்துவம்

2018 ஆம் ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட வார்த்தைகள்.!

Summary:

2018 year search in main words

கூகுளில் இந்த ஆண்டு அதிகம் கேட்கப்பட்ட மருத்துவம் தொடர்பான கேள்விகளில் இடம் பெற்ற வார்த்தைகள் குறித்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இன்றைய நவீன கால சூழ்நிலையில் அனைவரிடத்திலும் கணினி மற்றும் செல்போன்கள் உபயோகம் அதிகரித்துவிட்டது. இந்நிலையில் பெரும்பாலானோருக்கு எழும் சந்தேகம் மற்றும் அது தொடர்பான கேள்விகளுக்கு இணையத்தை நாடுகின்றன. அதிலும் குறிப்பாக கூகுள் தேடுபொறியை அதிகம் பயன்படுத்துகின்றனர்.

2018ம் ஆண்டில் கூகுள் தேடுபொறியில் இணைய வாசிகள் அதிகம் தேடிய மருத்துவ கேள்விகள் தொடர்பான பட்டியலை ”மெடிகேர் ஹெல்த் பிளேன்ஸ்” என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது. இந்த ஆய்வு முற்றிலும் மருத்துவ அடிப்படையில் அமைந்துள்ளது.

Image result for CANCER

புற்றுநோய்(CANCER)

இன்று மனித குலத்திற்கு மிகவும் சவாலாக விளங்கும் கொடிய நோய்தான் புற்றுநோய். இந்நோயானது புகையிலை, சிகரெட் போன்ற பொருட்களை அதிகம் பயன்படுத்துவதால் முக்கியமாக பரவுகிறது. ஆனாலும் இன்று பெண்களும் அதிக அளவில் இந்நோயினால் பாதிக்கப்பட்டு வருகின்றன. இதனால் google search செய்த வார்த்தைகளில்  புற்றுநோய் முதலிடத்தில் உள்ளது.

ரத்த அழுத்தம் (BLOOD PRESSURE )
அடுத்ததாக அதிகம் தேடப்பட்டு இருப்பது ரத்த அழுத்தம். அதிகமான பணிச்சுமை காரணமாக எந்திரம் போல் ஒவ்வொரு நாளும் சுழன்று கொண்டு வந்தாலும் சராசரியாக   ரத்த அழுத்தம் 40 வயதுக்கு மேற்பட்டவர்களிடம் காணப்படுகிறது.

Image result for blood pressure

சக்கரை (DIABETES )
முறைப்படுத்தப்படாத துரித வகை உணவுகள், கொழுப்பு நிறைந்த மாமிசம் உணவு, டப்பாக்களில் அடைத்து வைக்கப்பட்ட உணவு என்று நாகரீகம் என்ற போர்வையில் சிக்கிக் கொண்டிருக்கும் இச்சூழலில் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் அதிகரித்து உள்ளது என்பதற்கான சான்று தான் இந்த தேடல்.

தூக்கமின்மை (INSOMANIA )
நாம் உண்ணும் உணவு, நாம் பயன்படுத்தும் செல்போன் அனைத்தும் நமது தூக்கமின்மைக்கு ஒரு காரணமாக விளங்குகிறது.சமீபத்திய தரவுகளின் படி 93 சதவீத இந்தியர்கள் 8 மணி நேரத்திற்கு குறைவாகவே உறங்குகின்றனர்.

Related image

 டெங்கு(DENGUE )
சில ஆண்டுகளாக டெங்குவின் தாக்குதல் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் தான் மிகவும் பயன்படுத்தும் வார்த்தைகளில் டெங்கு இடம் பெற்றுள்ளது. 

இதை தொடர்ந்து 2018ம் ஆண்டில் google search செய்யப்பட்ட மருத்துவம் சார்ந்த வார்த்தைகளில் வயிற்றுப்போக்கு,  மன அழுத்தம், ஹெச்.ஐ.வி, எய்ட்ஸ், மலச்சிக்கல், மலேரியா, சிக்குன் குனியா ஆகிய வார்த்தைகளும் பட்டியலில் இடம்பெற்றுள்ளன 


 
 


Advertisement