ஈரோட்டில் சொத்துக்காக கணவனை சித்ரவதை செய்த மனைவி; மகனும் உடந்தையாக இருந்த கோர சம்பவம்

ஈரோட்டில் சொத்துக்காக கணவனை சித்ரவதை செய்த மனைவி; மகனும் உடந்தையாக இருந்த கோர சம்பவம்


wife-tortured-husband-for-assets

ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் சொத்தை தன் பெயரில் எழுதித்தர வேண்டி கணவரை ஒரு அறையில் அடைத்து வைத்து சூடு போட்டு கொடுமைய செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் சென்னிமலை தெற்கு புது வீதியை சேர்ந்தவர் நாரயணசாமி(50). இவர் தனது  45 வயது மனைவி லலிதா மற்றும் மகன் ஸ்ரீநாத் உடன் வசித்து வருகிறார்.

நாரயணசாமிக்கு 2 கோடி ரூபாய்க்கு மதிப்புள்ள பரம்பரை சொத்து உள்ளது. மேலும் வீட்டு வாடகையாக மாதந்தோறும் 30 ஆயிரம் ரூபாய் வருமானம் வருகிறது.

இதையடுத்து அவரின் மனைவி மற்றும் மகன் நாள்தோறும் அவரிடம் சொத்தை அவர்கள் பெயரில் எழுதி தரும்படி கேட்டுள்ளனர். மனைவி லலிதா உங்களிடம் உள்ள சொத்துகளை இப்போதே எனது பெயரில் மாற்றி எழுதி வைத்துவிடுங்கள் என்று தொடர்ந்து தொல்லை செய்து வந்துள்ளார்.

ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்த கணவர் நாராயணசாமி "உன் பெயரில் இப்போது சொத்தை மாற்ற மாட்டேன். பிறகு பார்க்கலாம்" என்று கூறினாராம். இதன் காரணமாக இருவருக்கும் தினந்தோறும் தகராறு வந்துள்ளது.

எப்படி கேட்டும் இவர் சொத்தை எழுதி வைக்காத காரணத்தினால் ஆத்திரமடைந்த மனைவி மற்றும் மகன் இருவரும், அவரை ஒரு தனி அறையில் அடைத்து வைத்து சொத்தை எழுதி தரும் படி கேட்டுள்ளனர்.

Latest tamil news

அவர் தொடர்ந்து மறுக்கவே, உடலில் பல இடங்களில் சூடு வைத்துள்ளனர். நேற்று இது போன்று சூடு வைத்த போது, ரமேஷ் வலி தாங்க முடியாமல் கத்தியதால், அருகிலிருப்பவர்கள் உடனடியாக அவரது உறவினர் ஒருவருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

அதன் பின் விரைந்து வந்த அந்த நபர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். இந்த தகவல் போலீசாருக்கு தெரியவந்ததால், கணவரை அறையில் அடைத்து சூடு போட்டு கொடுமை படுத்திய மனைவி லலிதா மற்றும் மகன் ஸ்ரீநாத்தையும் கைது செய்து இருவரையும் சிறையில் அடைத்தனர்.