பணம் இல்லாததால் குடும்பத்தை இத்தொழிலில் ஈடுப்படுத்திய ஆனந்த்

பணம் இல்லாததால் குடும்பத்தை இத்தொழிலில் ஈடுப்படுத்திய ஆனந்த்



poor farmer

 

கர்நாடக மாநிலம் பெங்களூருவை அடுத்த நெலமங்களாவில் உள்ள சிவகங்கே மலைப்பகுதியில் வசித்து வருபவர் ஆனந்த். இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகன் உள்ளனர்.

poor farmer

 பணமில்லாததால், தனது மனைவி மற்றும் மகனை விவசாயி ஒருவர் ஏரில் பூட்டி நிலத்தை உழுத சோக சம்பவம் நடந்துள்ளது.

ஆனந்திற்கு 3 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. தற்போது அங்கு மிதமான மழை பொழிந்து வருவதால், வட்டிக்கு கடன் வாங்கி ஆனந்த் நிலத்தை உழும் பணியை செய்து வந்தார்.

ஆனால், நிலத்திற்கு மேலும் செலவு செய்யவும், டிராக்டர் அல்லது மாடுகளை வாங்கவும் ஆனந்திடம் பணமில்லை. இதனால் விதைகளை விதைத்து ஏரின் வலதுபுறத்தில் தனது மனைவியையும், இடதுபுறத்தில் மகனையும் பூட்டி நிலத்தை உழும் அவல நிலைக்கு ஆளானார்.

இதுகுறித்து ஆனந்த் கூறுகையில்,

8 முதல் 10 ஏக்கர் வரை நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு தரும் அளவிற்கு, 2 ஏக்கர் நிலம் வைத்துள்ளவர்களுக்கு கடன் கிடைப்பதில்லை. இதனால் விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள். பணம் இல்லாததால் குடும்பத்தை இத்தொழிலியில் ஈடுபடுத்த வேண்டிய நிலை உள்ளது’ என தெரிவித்துள்ளார்.