மனைவியின் மீது சந்தேகமடைந்த கணவர்; நள்ளிரவில் நடந்த கொடுமையை பாருங்கள்

மனைவியின் மீது சந்தேகமடைந்த கணவர்; நள்ளிரவில் நடந்த கொடுமையை பாருங்கள்


husband kiiled his wife in chennai

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொலை, கொள்ளை சம்பவங்கள் அரங்கேறிக்கொண்டே இருக்கின்றன. அதிலும் கணவன் மனைவியின் இடையே ஏற்படும் தகராறால் நடைபெறும் கொலைகள் மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றது.

சென்னையில் நேற்று நள்ளிரவில் கணவன் மனைவி இடையே நடைபெற்ற சம்பவம் பற்றிய பதிவு தான் இது.

murder in chennai

சென்னை அண்ணா நகரை அடுத்த டி.பி.சத்திரம் நியூ காலனியில் வசிப்பவர் சீனிவாசன்(30). இவர் மாநகராட்சி ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி அம்மு(26). இவர்களுக்கு 8 வயதில் ஒரு மகன் உள்ளார்.

மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த சீனிவாசன், தன் மனைவியுடன் அடிக்கடி சண்டை போட்டுள்ளார். இவ்வாறு தகராறு ஏற்பட்டால் நள்ளிரவு வரை நீடிக்கும் என்று கூறப்படுகிறது.

தனது பெற்றோர் வீட்டுக்கு அருகில் வீடெடுத்து மனைவி, மகனுடன் சீனிவாசன் வசித்து வந்தார். 

இந்நிலையில், நேற்றைய தினம் சீனிவாசன் தனது மனைவியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இருவருக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில், அம்முவை பலமாக தாக்கிய சீனிவாசன் பின் அவரை கழுத்தறுத்து கொலை செய்துள்ளார்.

murder in chennai

இதனால், அவர் ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்து விழுந்துள்ளார். அதனைத் தொடர்ந்து, உடனடியாக தனது உடைகளை மாற்றிக் கொண்ட சீனிவாசன், தூங்கிக் கொண்டிருந்த தனது மகனை தூக்கிக் கொண்டு தனது பெற்றோரின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

அங்கு நடந்தவற்றை கூறிய சீனிவாசன், மகனை அவர்களிடம் ஒப்படைத்துவிட்டு அவசர உதவி போலீசை தொலைபேசியில் தொடர்புகொண்டு தனது வீட்டின் முகவரியை கூறி, கணவன்-மனைவி இரவு முழுவதும் சண்டையிட்டுக் கொண்டிருப்பதாகவும், மிகவும் சத்தமாக இருப்பதனால் தொல்லையாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

பின்னர் அங்கிருந்து தப்பித்து ஓடிவிட்டார்  சீனிவாசன். இந்நிலையில், உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பதற்றத்துடன் இருந்த சீனிவாசனின் பெற்றோரிடம் நடந்த சம்பவத்தை பற்றி கேட்டுள்ளனர்.

அவர்களும் தனது மகன், அம்முவை கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றுவிட்டதாக தெரிவித்துள்ளனர். அதன் பின்னர், அம்முவின் உடலைக் கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தப்பியோடிய சீனிவாசன் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.