ஜெயம் ரவிக்கு ஜோடியாக துடிக்கும் பிரபல நடிகை; நிறைவேறுமா அந்த ஆசை?

ஜெயம் ரவிக்கு ஜோடியாக துடிக்கும் பிரபல நடிகை; நிறைவேறுமா அந்த ஆசை?



famous actress wants to act with jeyam ravi

ஜெயம் ரவி தன்னுடைய தந்தையின் தயாரிப்பிலும், சகோதரனின் இயக்கத்திலும் வெளிவந்த ஜெயம் திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார்.

தமிழில் பல்வேறு வெற்றிப்படங்களை கொடுத்தவர் ஜெயம் ரவி. ஜெயம் ரவி தனது அண்ணன் மோகன்ராஜா இயக்கத்தில் நடித்த தனி ஒருவன் திரைப்படம் நல்ல வசூலை பெற்றது.

இந்த நிலையில் ஜெயம் ரவி நடித்த ‘போகன்’ திரைப்படத்தில் காஜல் அகர்வால் நடிக்க விரும்பியதாக கூறப்பட்டது. பத்து வருடங்களில் 50 படங்களுக்கு மேல் நடித்து விட்டார் காஜல்.

jeyam ravi

ஜெயம் ரவியின் அடுத்த படத்தில் ஜோடியாக நடிக்க காஜல் அகர்வால் ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்தப் படத்தை புதுமுக இயக்குனர் ஒருவர் இயக்க இருப்பதாகவும், இது குறித்த அறிவிப்பு வெகு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. 

மும்பை அழகியான காஜல் அகர்வால் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார். இவர் இந்தித் திரைப்படமான ‘கியூன் ஹோ கயா நா’வில் 2004ஆம் ஆண்டு ஐஸ்வர்யா ராயின் தோழியாக அறிமுகமானார்.

jeyam ravi

பின்னர் தெலுங்கில் ‘லட்சுமி கல்யாணம்’ என்ற படத்திலும், தமிழில் ‘பழனி’ என்ற படத்திலும் நடித்தார். ராஜ மவுலி இயக்கத்தில் 2009ஆம் ஆண்டு வெளியான ‘மகதீரா’ திரைப்படம் மூலம் அனைவரின் கவனத்தையும் பெற்றார்.

அதிலிருந்து இப்போது வரை அவருக்கான கிரேஸ் குறையாமல் இருந்து வருகிறது. தென்னிந்தியாவின் முன்னணி ஹீரோக்கள் அனைவருடனும் நடித்துவிட்டார்.