சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தற்கொலை! அதிர்ச்சியில் ரசிகர்கள்...!
விவாகரத்து செய்ததால் டாக்டர்க்கு வந்த வினையை பாருங்கள்...!
ஜெர்மெனியில் கத்தோலிக்க சபை சார்பில் நடத்தப்படும் மருத்துவமனையில் பணியாற்றி வந்த மருத்துவர் ஒருவர் தனது இரண்டாவது திருமணம் செய்துகொண்ட காரணத்தால் பணியில் இருந்து நீக்கப்பட்டார். இது தொடர்பாக வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
Düsseldorf இல் அமைந்துள்ள Catholic St. Vinzenz மருத்துவமனையில் பணியாற்றி வந்த மருத்துவர் ஒருவர் 2008 ஆம் ஆண்டு தனது மனைவியை விவாகரத்து செய்துவிட்டு இரண்டாவது செய்துகொண்டார்.
ஜெர்மெனியில் கத்தோலிக்க முறையின் படி திருமணம் ஆகி விவாகரத்து என்பது மதம் ரீதியான பண்பாட்டை மீறுவது ஆகும். அப்படி யாரேனும் மீறினால் கடும் தண்டனை கிடைக்கும் என்ற சட்டமும் அங்கு உள்ளது. இந்நிலையில் ஒரு கத்தோலிக்க சபை தொடர்பான மருத்துவமனையில் பணியாற்றிக்கொண்டிருக்கையில் மருத்துவர் இவ்வாறு செய்துகொண்டது ஏற்றுக்கொள்ள முடியாது என்பதால் அவரை பணியில் இருந்து 2009 ஆம் ஆண்டு நீக்கம் செய்யப்பட்டார்.
இதனை கண்டித்து அந்த மருத்துவர் கோர்ட் சென்று வழக்கு தொடர்ந்தார். இதன் அடிப்படையில் இது தொடர்பான வழக்கு விசாரணையில் நான் கத்தோலிக்க கிடையாது என்றும் என்னை பணியில் இருந்து நீக்கம் செய்தது என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தன் தரப்பு விளக்கத்தை தெரிவித்துள்ளார்.
ஃபெடரல் லேபர் நீதிமன்றம் இந்த முடிவானது ஐரோப்பிய ஒன்றிய சட்டத்திற்கு உடன்பட்டதாக இருந்ததா இல்லையா என்பதைப் பரிசீலிக்குமாறு ஐரோப்பிய நீதிமன்ற நீதிபதிக்கு பரிந்துரைத்துள்ளது.