தமிழகம்

சென்னை - புதுச்சேரி, கன்னியாகுமரி இடையே கப்பல் போக்குவரத்து.. குஷியான அறிவிப்பு.. எப்போது தொடக்கம்?..!

Summary:

சென்னை - புதுச்சேரி, கன்னியாகுமரி இடையே கப்பல் போக்குவரத்து.. குஷியான அறிவிப்பு.. எப்போது தொடக்கம்?..!

சென்னையில் இருந்து புதுச்சேரி பயணிகள் கப்பல் போக்குவரத்து விரைவில் தொடங்கப்படும். அதனைப்போல, சென்னை - கன்னியாகுமரி இடையேயான பயணிகள் கப்பல் போக்குவரத்து பணிகள் முதற்கட்ட நிலையில் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் எண்ணூர் காமராஜர் துறைமுகம் நிதியாண்டு செயல்பாடுகள் தொடர்பாக, துறைமுக தலைவர் - மேலாண்மை இயக்குனர் சுனில் பாலிவால் செய்தியாளர்களை சந்தித்தார். 

இந்த செய்தியாளர்கள் சந்திப்பில், "மத்திய அரசிடம் இருந்த எண்ணூர் காமராஜர் துறைமுக பங்குகள் 50 % சென்னை துறைமுகத்தால் வாங்கப்பட்டதை தொடர்ந்து, எண்ணூர் காமராஜர் துறைமுக உரிமையாளராக சென்னை துறைமுகம் உருவெடுத்து உள்ளது. கடந்த நிதியாண்டை பொறுத்தமட்டில் சென்னை துறைமுகம் 49 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டுள்ளது. 

எண்ணூர் துறையூகம் 39 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டுள்ளது. சென்னை துறைமுகத்தின் வாயிலாக கடந்த நிதியாண்டில் ரூ.826 கோடி வருவாய் கிடைத்துள்ளது. காமராஜர் துறைமுகம் வாயிலாக ரூ.827 கோடி வருவாய் கிடைத்துள்ளது. நிலுவையில் இருக்கும் சென்னை துறைமுகம் - மதுரவாயல் உயர்மட்ட மேம்பாலம் இரண்டடுக்கு மேம்பாலமாக மாற்றி அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயாராகி இருக்கிறது.

சென்னை - புதுச்சேரி இடையே விரைவில் பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவது குறித்த பணிகள் நடைபெறுகிறது. அதனைப்போல, சென்னை - கன்னியாகுமரி பயணிகள் கப்பல் போக்குவரத்து குறித்த திட்டமும் தொடக்க நிலையில் உள்ளது" என்று தெரிவித்தார். 


Advertisement