ஜிம்மில் தீயாய் ஒர்க் அவுட் செய்யும் அட்டக்கத்தி நாயகி.! இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்!!
பெண்களின் அம்மன் வேட நடனக் காணொளி வைரல்! எங்க ஊரு எங்க கெத்து....மெய்சிலிர்க்க வைத்த நடனம்!
விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு ஒளிபரப்பான ஜீ தமிழ் தொலைக்காட்சியின் சிறப்பு நிகழ்ச்சி தற்போது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. குறிப்பாக பெண்கள் ஆடிய அம்மன் வேடம் கொண்ட நடனக் காட்சி இணையத்தில் வேகமாக வைரலாகி, சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சின்னத்திரையின் சிறப்பு நிகழ்ச்சிகள்
தமிழ் சின்னத்திரையில் மக்களின் மனங்களை கவர்ந்த நிகழ்ச்சிகளை தொடர்ந்து வழங்கி வரும் ஜீ தமிழ், இசை மற்றும் நடன நிகழ்ச்சிகளால் சிறப்பிடம் பெற்றுள்ளது. குறிப்பாக 'சரிகமப' பாடல் போட்டி மற்றும் DJD நடன நிகழ்ச்சி, மிகப்பெரும் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளது.
சிங்கிள் பசங்க வெற்றி நடை
கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வரும் 'சிங்கிள் பசங்க' நிகழ்ச்சி, தனித்துவமான பாணியால் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதில் சுரேஷ், திடியன், தமிழரசன், ஜிமிகிளி, விக்னேஷ், ராவணன், ராகவேந்திரா உள்ளிட்ட பல பிரபலங்கள் போட்டியாளர்களாக பங்கேற்று வருகிறார்கள்.
இதையும் படிங்க: பார்க்க எப்படி இருக்கு! ஐஸ்வர்யா ராயின் லுக்கை ரீகிரியேட் செய்த ஆல்யா மானசா! இணையத்தில் செம வைரல்...
விஜயதசமி சிறப்பு நிகழ்ச்சி வைரல்
'எங்க ஊரு எங்க கெத்து' எனும் விஜயதசமி சிறப்பு நிகழ்ச்சியில், சிங்கிள் பசங்க, சரிகமப, DJD போட்டியாளர்களாக பங்கேற்று வரும் பெண்கள், ஆதிபராசக்தி வடிவில் அம்மன் வேடமிட்டு மகிஷாசுரனை அழிக்கும் புராணக் காட்சியை நடனமாக வெளிப்படுத்தினர். அந்த காட்சி ரசிகர்களின் மனதை கவர்ந்து, இணையத்தில் அசுர வேகத்தில் பகிரப்பட்டு வருகிறது.
ஜீ தமிழ் தொடர்ந்து வழங்கி வரும் இவ்வகை சிறப்பு நிகழ்ச்சிகள், பார்வையாளர்களுக்கு விருந்தாக மட்டுமல்லாமல், சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்படும் தருணங்களாக மாறி வருகின்றன. இதனால், சின்னத்திரை ரசிகர்களின் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதையும் படிங்க: வேற லெவல்! அமர்க்கள படுத்திடீங்க...பழைய பாடல்களை ரீகிரியேட் செய்த சிங்கிள் பசங்க போட்டியாளர்கள்! வைரலாகும் ப்ரோமோ வீடியோ...