என்னவொரு பிரம்மாண்டம்! இதுவரை எந்த சீரியலிலும் கண்டிராத விஷயம்! வியந்துபோன ஜீ தமிழ் ரசிகர்கள்!!

என்னவொரு பிரம்மாண்டம்! இதுவரை எந்த சீரியலிலும் கண்டிராத விஷயம்! வியந்துபோன ஜீ தமிழ் ரசிகர்கள்!!


zee-tamil-serial-making-video-viral

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வித்தியாசமான கதையுடன், ஏராளமான சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. மேலும் அவை ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு பெற்று டிஆர்பியிலும் முன்னணிக்கு வந்தது. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் செம்பருத்தி, பூவே பூச்சூடவா, யாரடி நீ மோகினி  உள்ளிட்ட பல தொடர்களும் ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

அந்த வரிசையில் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று ஒளிபரப்பாகி வரும் தொடர் நீதானே என் பொன்வசந்தம். கடந்த ஒரு வருடமாக ஒளிபரப்பாகி வரும் இந்த தொடர் மக்கள் மனதை பெருமளவில் கவர்ந்துள்ளது. நீதானே என் பொன்வசந்தம் தொடரில் ஹீரோவாக ஜெய் ஆகாஷ் நடித்து வருகிறார்.

சற்று வயது நிறைந்த ஒருவரை இளம்பெண் காதலிப்பது போன்ற கதையை மையமாகக் கொண்டு ஒளிபரப்பாகி வரும் இத்தொடரில் ஹீரோயினுக்கு காதலைச் சொல்லும் காதல் காட்சி ஒன்று இடம்பெறவுள்ளது. அதற்காக இதுவரை எந்த சீரியலிலும் செய்யப்படாத பிரம்மாண்டமான விஷயம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதாவது கதாநாயகன் தனது காதலியை ஹெலிகாப்டரில் அழைத்து சென்று காதலைக் கூறவுள்ளார். இதுகுறித்த வீடியோவை ஜீ தமிழ் தொலைக்காட்சி சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்ட நிலையில் அது வைரலாகி வருகிறது. மேலும் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.