விஜய்யின் GOAT திரைப்படம் குறித்து மாஸாக பதில் யுவன் ஷங்கர் ராஜா!

விஜய்யின் GOAT திரைப்படம் குறித்து மாஸாக பதில் யுவன் ஷங்கர் ராஜா!



Yuvan speech about GOAT movie

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தளபதி விஜய். தற்போதைய இவர் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க, யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

vijay

மேலும், இந்த படத்தில் விஜய்யுடன் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், மீனாட்சி சவுத்ரி, சினேகா, வைபவ், அரவிந்த், பிரேம்ஜி உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் நடிக்கின்றனர். இந்தப் படத்தின் படிப்பிடிப்பு சென்னை மற்றும் தாய்லாந்தில் நடைபெற்று வந்தது.

தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனிடையே நடிகர் விஜய் இந்த படத்தின் படப்பிடிப்பை முடித்துள்ளதாக கூறப்படுகிறது.

vijay

இந்த நிலையில் இந்த திரைப்படம் குறித்து இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பேசியுள்ளார். அதன்படி பேசிய அவர், இந்தப் படத்தை நான் மிகவும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். பாடல்கள் சிறப்பாக வந்துள்ளன. இம்முறை பேச்சு கிடையாது. இனிமேல் வீச்சு தான் என்பதில் தெளிவாக இருக்கிறேன் என அவர் கூறியுள்ளார்.