சினிமா

பெரும் எதிர்பார்ப்பில் இருந்த சிம்பு ரசிகர்கள்! செம சூப்பர் தகவலை வெளியிட்ட இசையமைப்பாளர் யுவன்! என்ன தெரியுமா?

Summary:

வெங்கட் பிரபு இயக்கத்தில் தமிழ் சினிமாவின் நட்சத்திர நாயகன் சிம்பு நடிப்பில் உருவாகி

வெங்கட் பிரபு இயக்கத்தில் தமிழ் சினிமாவின் நட்சத்திர நாயகன் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் மாநாடு. இப்படத்தில் நடிகை கல்யாணி பிரியதர்ஷன், பிரேம் ஜி, எஸ் ஜே சூர்யா, டேனியல் போப், கருணாகரன், மனோஜ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். அந்த படத்தின் முதல் பாடலை மே 14 ரம்ஜானை முன்னிட்டு வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர். 

இந்த நிலையில் இயக்குனர் வெங்கட்பிரபுவின் தாயார் உடல்நல குறைவால் காலமானார். அதை தொடர்ந்து படக்குழுவினர் அந்த பாடல் வெளியீட்டை சில காலங்களுக்கு தள்ளி வைத்தனர். பின்னர் இதுகுறித்து ரசிகர்கள் தொடர்ந்து கேட்டுவந்த நிலையில் அண்மையில் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா விரைவில் மாநாடு படத்தின் பாடல் ரிலீஸாகும் என தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது மாநாடு படத்தின் முதல் பாடல் ரிலீஸ் குறித்த அப்டேட்டை யுவன் ஷங்கர் ராஜா தனது சமூக வலைதளபக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதாவது மாநாடு படத்தின் முதல் பாடல் மாஷா அல்லாஹ் வரும் ஜூன் 21 தேதி வெளியாகும் என அறிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.


Advertisement