சினிமா

தலை துண்டிக்கப்பட்ட நிலையில் யுவன்ஷங்கர் ராஜா வெளியிட்ட பெண்ணின் புகைப்படம்!

Summary:

YSR films alice movie first look

இசையமைப்பாளர் யுவான்ஷாங்கர் ராஜாவின் திரைப்பட தயாரிப்பு நிறுவனமான YSR பிலிம்ஸ் மூலம் ரைசா நடிப்பில் அடுத்து உருவாகும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியானது.

YSR பிலிம்ஸ் நிறுவனத்தின் மூலம் யுவான்ஷாங்கர் ராஜா முதலில் வெளியிட்ட படம் 'பியார் பிரேமா காதல்'. இந்த படத்தில் பிக் பாஸ் புகழ் ஹரிஷ் கல்யாண் மற்றும் ரைசா இணைந்து நடித்தனர். யுவான்ஷாங்கர் ராஜா இசையில் வெளியான இந்த படத்தின் பாடல்கள் மாபெரும் வெற்றியடைந்தது.

தொடர்புடைய படம்

பியார் பிரேமா காதல் படத்தை தொடர்ந்து நயன்தாராவின் கொலையுதிர் காலம் படத்தினை தயாரித்து வருகிறது YSR பிலிம்ஸ். இந்த படம் அடுத்த மாதம் வெளியாக உள்ள நிலையில் தங்களது அடுத்த படத்தை பற்றிய அறிவிப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை யுவான்ஷாங்கர் ராஜா இன்று வெளியிட்டுள்ளார்.

பியார் பிரேமா காதல் படத்தை தொடர்ந்து 'ஆலிஸ்' என பெயரிடப்பட்டிருக்கும் இந்த படத்திலும் பிக் பாஸ் புகழ் ரைசா நடிக்கிறார். இன்று வெளியாகியிருக்கும் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் ரைசாவின் தலை மட்டும் துண்டிக்கப்பட்டு காற்றில் பறப்பது போல் வெளியாகியுள்ளது. எனவே இந்த படம் ஒரு திரில்லர் கதையம்சம் கொண்டது என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது. இந்த படத்திற்கும் யுவான்ஷாங்கர் ராஜா இசையமைக்கிறார். 


Advertisement