சினிமா

செல்போனில் பேசியபடியே சென்ற பெண்! பைக்கில் நெருங்கி வந்து இளைஞர்கள் செய்த காரியம்!! அதிரவைத்த பரபரப்பு சம்பவம்!!

Summary:

ஜோலார்பேட்டை அடுத்த தாமலேரிமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் சிவகுமார். இவரது மனைவி சுமிலா. சிறு

ஜோலார்பேட்டை அடுத்த தாமலேரிமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் சிவகுமார். இவரது மனைவி சுமிலா.  அவர் திருப்பத்தூரில் துணிக்கடை ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இந்தநிலையில் அண்மையில் வேலை முடிந்து வீடு திரும்பிய அவர் பஸ்ஸிலிருந்து இறங்கி செல்போனில் தனது அம்மாவிடம் பேசியபடி நடந்து சென்றுள்ளார்.

அப்போது ஜோலார்பேட்டையில் இருந்து திருப்பத்தூர் நோக்கி ஒரே பைக்கில் வந்த மூன்று பேர் சுமிலாவை நெருங்கி அவரது செல்போனை பறிக்க முயன்றுள்ளனர். ஆனால் உஷாரான சுமிலா சாமர்த்தியமாக செல்போனை விடாமல் இறுக்க பிடித்துகொண்டு கத்திக் கூச்சலிட்டுள்ளார். இந்நிலையில் அங்கிருந்த பொதுமக்கள் ஓடிவந்து விரட்டி பிடித்து ஒரு நபரை போலீசில் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து ஜோலார்பேட்டை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில் அந்த நபர்கள் கிருஷ்ணகிரி மாவட்டம் பெரியதள்ளபடி பகுதியை சேர்ந்த சூர்யா, அரவிந்தன் மற்றும் ஜோலார்பேட்டை அடுத்த மண்டலவாடி பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பது தெரியவந்தது. இதில் போலீசார் அரவிந்தன் என்பவரை கைது செய்துள்ளனர். மேலும் தப்பிச்சென்ற சூர்யா, கார்த்திக் ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர்.


Advertisement