தமிழகம் காதல் – உறவுகள்

கழிவறை முன் சடலமாகக் கிடந்த சரஸ்வதி! பதுங்கி நின்று தம்பியுடன் துடிதுடிக்க காதலர் செய்த கொடூரம்! பகீர் சம்பவம்!!

Summary:

 கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சரஸ்வதி.18 வயது நிறைந்த

கள்ளக்குறிச்சி மாவட்டம் தேவியானந்தல் பகுதியை சேர்ந்தவர் சரஸ்வதி.18 வயது நிறைந்த இவர் நர்ஸிங் படித்துக்கொண்டிருக்கின்றார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு காலை கழிவறை வாசலில் சரஸ்வதி சடலமாக கிடந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த  குடும்பத்தினர்கள் போலிசாருக்கு தகவலளித்த நிலையில் அவர்கள் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது. பின்னர் போலீசார்கள் விசாரணை மேற்கொண்டதில் சரஸ்வதி ரங்கசாமி என்பவரை காதலித்து வந்ததாக கூறப்பட்டுள்ளது. பின்னர் சரஸ்வதி இறந்ததிலிருந்து தலைமறைவாக இருந்த ரங்கசாமியை  கண்டுபிடித்து விசாரித்ததில் அவர்தான் சரஸ்வதியை கழுத்தை இறுக்கி கொலை செய்துள்ளார் என்பது தெரியவந்தது.

அதாவது ரங்கசாமி மற்றும் சரஸ்வதி இருவரும் காதலித்து வந்ததாகவும். அது பெற்றோருக்கு தெரியவந்த நிலையில் அவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் எனவும் கூறப்படுகிறது. இதற்கிடையில் சரஸ்வதிக்கு மாப்பிள்ளை பார்க்கும் வேலையும் தீவிரமாக நடைபெற்றுள்ளது. இந்நிலையில் ஓடிப்போய் திருமணம் செய்து கொள்ளலாம் என ரங்கசாமி கேட்டதற்கு சரஸ்வதி பெற்றோரை எதிர்த்து எதுவும் செய்ய முடியாது எனக் கூறியுள்ளாராம்.

அதனை தொடர்ந்து சரஸ்வதி வீட்டின் பின்புறம் மறைந்திருந்த ரங்கசாமி கழிவறைக்கு வந்த அவரிடம் தகராறு செய்து துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பித்துள்ளார். மேலும் ரங்கச்சாமியுடன் அவரது நண்பர் ரவீந்தர் மற்றும் தம்பி 17 வயது சிறுவன் ஒருவரும் உதவிக்கு வந்துள்ளனர். அதனைத் தொடர்ந்து போலீசார்கள் ரங்கசாமி, ரவீந்தர் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் 17 வயது சிறுவனை சீர்த்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.

    


Advertisement