தமிழகம் சினிமா

தன்னை திருமணம் செய்துகொள்வதாக பணம் வாங்கி மோசடி.! நடிகர் ஆர்யா மீது இளம்பெண் கொடுத்த அதிர்ச்சி புகார்.!

Summary:

தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து சாக்லெட் பாயாக இளம் பெண்களின் கனவு கண்ணனா

தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து சாக்லெட் பாயாக இளம் பெண்களின் கனவு கண்ணனாக திகழ்ந்தவர் நடிகர் ஆர்யா. இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கஜினிகாந்த் திரைப்படத்தில் நடித்த போது தனக்கு ஜோடியாக நடித்த நடிகை சாயிஷாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

திருமணத்திற்கு முன்பு ஆர்யாவுக்கு கலர்ஸ் தொலைக்காட்சியில் எங்கள் வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சியின் மூலம் பெண் பார்க்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆனால் அவர் இறுதியில் எவரையும் திருமணம் செய்து கொள்ளாமல் எஸ்கேப் ஆனார் ஆர்யா.

இந்நிலையில் இப்போது அவர் தன்னை திருமணம் செய்துகொள்வதாக கூறி தன்னிடம் 80 லட்சம் பணம் வாங்கிக்கொண்டு ஏமாற்றி விட்டதாக இலங்கையைச் சேர்ந்த விட்ஜா என்ற பெண் புகார் அளித்துள்ளார். அந்த பெண் தற்போது ஜெர்மன் நாட்டில் குடியுரிமை வாங்கி வாழ்ந்து வருகிறார். இப்போது அவர் பிரதமர் மற்றும் குடியரசுத் தலைவர் அலுவலகங்களுக்கு ஆன்லைன் மூலமாக புகார் அளித்துள்ளார். 

அந்த புகாரில், பணத்துக்கு கஷ்டப்படுவதாக ஆர்யா தன்னிடத்தில் கூறினார் என்றும் உன்னை நான் விரும்புகிறேன். திருமணம் செய்து கொள்ளவும் ஆசைப்படுகிறேன் என்றும் கூறியதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்க கூறி உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 


Advertisement