வேட்டையன் ரூ.1000 கோடி வசூல்: மண்சோறு சாப்பிட்டு ரஜினி ரசிகர்கள் வழிபாடு.!
"கவுண்டமணி அப்படிப்பட்ட ஆள் தான்" பிரபலத்தின் சர்ச்சையான பேச்சு..
போர்கொடி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் விசித்ரா. இவர் 90களின் காலகட்டத்தில் செந்தில், கவுண்டமணி போன்ற காமெடி நட்சத்திரங்களின் திரைப்படங்களில் கவர்ச்சி நடிகையாக நடித்துள்ளார். திருமணம் செய்து கொண்டு திரை துறையை விட்டு விலகிய விசித்ரா, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட சீரியலின் மூலம் சின்னத்திரையில் நடித்து வந்தார்.
பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட குக் வித் கோமாளி, பிக் பாஸ் போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். இவ்வாறு சின்னத்திரையில் பிஸியாக இருந்து வந்த விசித்ரா, ஒரு சேனலின் பேட்டியில், கவுண்டமணிக்கு படப்பிடிப்பின் போது வணக்கம் சொல்லாததால் மிகப்பெரும் பிரச்சனையாக்கி விட்டார் என்று கூறியிருந்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனை அடுத்து தற்போது பிரபல பத்திரிக்கையாளர் அந்தனன் அவரது யூ ட்யூப் சேனலில், "கவுண்டமணி சினிமாவில் நடிக்கும் காலகட்டத்தில் எப்படிப்பட்டவர் என்பது குறித்து அனைவரும் அறிந்ததே. வணக்கம் சொல்லாததற்கு பிரச்சனை ஏற்படுத்தி இருப்பார் என்று கூறினால் அது உண்மையாகத்தான் இருக்கும். அப்படிப்பட்ட ஆள் தான் கவுண்டமணி" என்று பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.