அட நீங்களுமா? யோகிபாபு வெளியிட்ட புகைப்படத்தை பாருங்க, உங்களுக்கே புரியும்!!yogibabu-teasing-priyanga-chopra-hair-style

உலகளவில் பிரபலமான இந்திய நடிகைகளில் ஒருவர் பிரியங்கா சோப்ரா. விஜய் நடிப்பில் வெளியான தமிழன் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதன்பின்னர் பாலிவுட் பக்கம் சென்றுவிட்டார். ஹிந்தியில் அணைத்து முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார் பிரியங்கா சோப்ரா.

சமீபத்தில் பிரபல அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோன்ஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார் பிரியங்கா சோப்ரா.

priyanga chopra

இந்நிலையில் ப்ரியங்கா சமீபத்தில் தன் கணவருடன் ஒரு விழாவிற்கு சென்றுள்ளார், அங்கு அவர் அணிந்து வந்த உடை மற்றும் மேக்கப், ஹேர்ஸைடல் ரசிகர்களால் செம்மையாக கலாய்த்து வரப்படுகின்றது. அந்த புகைப்படத்தில் பிரியங்கா சோப்ரா பார்ப்பதற்கு அடையாளமே தெரியாமல் மாறியுள்ளார் .

மேலும் இதை பார்த்த காமெடி நடிகர் யோகி பாபு தான் பெண் வேடம் அணிந்த புகைப்படத்துடன், ப்ரியங்கா சோப்ராவின் புகைப்படத்தையும் சேர்த்து ட்விட்டரில் வெளியிட்டு சிரித்துள்ளார்.அதற்கு ரசிகர்கள் பலரும் கிண்டல் செய்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.