சினிமாவையே கலக்கும் நம்ம யோகி பாபுவுக்கு இப்படியொரு கதாபாத்திரமா? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!



yogibabu-act-differenr-character-in-kavi-aavi-naduvula

தமிழில் புகழ்மணி வசனம் எழுதி, இயக்கும் படம் காவி ஆவி நடுவுல தேவி. இப்படத்தில் ராம் சுந்தர் என்பவர் கதாநாயகனாக அறிமுகமாகிறார் மேலும் இவருக்கு ஜோடியாக பிரியங்கா நடிக்கிறார்.

இப்படத்தில் தம்பி இராமையா, யோகி பாபு, நான் கடவுள்  மொட்டை ராஜேந்திரன், இமான் அண்ணாச்சி ஆகியோர் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கிறார்.

 இந்நிலையில் காவி ஆவி நடுவுல தேவி படம் குறித்து கதையாசிரியர் வி.சி.குகநாதன் கூறுகையில், மாபெரும் புகழ்பெற்ற 4 பிரபல நகைச்சுவை நடிகர்களின் கூட்டணியில் காவிஆவி நடுவுல தேவி படம் தயாராகி வருகிறது.

yogibabu

 மேலும் இப்படத்தில் காதலர்களை  சேர்த்து வைக்கும் கண்ணனாக யோகி பாபுவும், காதலை பிரித்து வைக்கும் தாதாவாக மொட்டை ராஜேந்திரனும் நடிக்கின்றனர். மேலும் மலையாள மாந்திரீகனாக  இமான் அண்ணாச்சியும் நடித்து வருகின்றனர்.

மேலும் நகைச்சுவையாக உருவாகிவரும் இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் மிகவும் சிறப்பாக படமாக்கப்பட்டுள்ளது. மேலும் இப்படம் ஆகஸ்ட் மாதம் திரைக்கு வரும் எனவும்  கூறியுள்ளார் இதனால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.