நடிகர் யோகி பாபுவின் மகனா இது... அப்பாவை போல அப்படியே இருக்காரே... வைரலாகும் புகைப்படம்!!

நடிகர் யோகி பாபுவின் மகனா இது... அப்பாவை போல அப்படியே இருக்காரே... வைரலாகும் புகைப்படம்!!


Yogi Babu son photo viral

தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து இன்று முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் நடிகர் யோகிபாபு. இவர் இல்லாத பெரிய படங்களே இல்லை என்கிற அளவிற்கு பல பெரிய பட்ஜெட் படங்களில் நடித்து வருகிறார்.

இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு மஞ்சு பார்கவி என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு  கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அழகிய ஆண் குழந்தை பிறந்தது. ஆனால், இதுவரை யோகி பாபு தனது மகனின் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிடாமல் இருக்கும் நிலையில், தற்போது அவரின் மகன் புகைப்படமும், வீடியோவும், இணையத்தில் வைரலாகி வருகிறது.

நேற்று நடிகர் யோகிபாபு தனது 37-வது பிறந்த நாள் தனது வீட்டில் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். அவரது வீட்டில் ஒரு பார்ட்டியும் நடந்துள்ளது. அந்த பார்ட்டியில் கலந்து கொண்ட பிரபல நடிகையான சஞ்சனா சிங் அங்கு யோகி பாபு மற்றும் அவரது மகனுடன் எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது அப்புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.