விஜய்யின் GOAT படத்தில் இணைந்த பிரபல காமெடி நடிகர்? அடடே இவரா?

விஜய்யின் GOAT படத்தில் இணைந்த பிரபல காமெடி நடிகர்? அடடே இவரா?



yogi-babu-in-vijay-in-goat-movie

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தளபதி விஜய். தற்போதைய இவர் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க, யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

vijay

மேலும், இந்த படத்தில் விஜய்யுடன் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், மீனாட்சி சவுத்ரி, சினேகா, வைபவ், அரவிந்த், பிரேம்ஜி உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் நடிக்கின்றனர். இந்தப் படத்தின் படிப்பிடிப்பு சென்னை மற்றும் தாய்லாந்தில் நடைபெற்று வந்தது.

தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனிடையே இந்தப் படத்திற்கு GOAT என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு வரும் ஜூன் 22ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

vijay

இந்த நிலையில் GOAT படத்தின் ஒரு முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி இந்த படத்தில் பிரபல காமெடி நடிகர் யோகி பாபு இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், அவர் சம்மந்தப்பட்ட காட்சிகளை இயக்குனர் வெங்கட் பிரபு படமாக்கியுள்ளார் என்று கூறப்படுகிறது.