சினிமா

பிக்பாஸ் பாத்திமாவை கலாய்த்து, நடிகை யாஷிகா செய்துள்ள காரியத்தை பார்த்தீங்களா.!

Summary:

yashika post meme about pathima babu entering bigboss

தமிழ் சினிமாவில் இருட்டுஅறை முரட்டுகுத்து  என்ற படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே பெருமளவில் பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். அதனை தொடர்ந்து அவர் பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் இரண்டாவது சீசனில் போட்டியாளராக பங்கேற்றார். பின்னர் தமிழ்மக்களிடையே மேலும் பிரபலமானார்.

இவ்வாறு தனக்கு  கிடைத்த வாய்ப்பை மிகவும் சரியாக பயன்படுத்திக் கொண்ட யாஷிகா, அதனை தொடர்ந்து அடுத்தடுத்து பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். மேலும் எப்பொழுதும் சமூகவலைதளங்களில் பிஸியாக இருக்கும் அவர் தற்பொழுது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிக்பாஸ் மூன்றாவது சீஸனில் போட்டியாளராக பங்கேற்கும் செய்திவாசிப்பாளர் மற்றும் நடிகையான பாத்திமா பாபுவை கலாய்க்கும்விதமாக மீம் ஒன்றை ஸ்டேட்டஸாக வைத்துள்ளார்.

fathima babu in bigboss க்கான பட முடிவு

அந்த மீம் கடந்த ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் போட்டியாளராக யாஷிகா கலந்து கொண்டபோது ரசிகர்கள்  மிக மகிழ்ச்சியாகவும், இந்த சீசனில் பாத்திமா முதல் போட்டியாளராக களமிறங்கிய போது எரிச்சலாக பார்ப்பது போன்றும் உருவாக்கப்பட்டிருந்தது. அந்த மீம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Advertisement