என்னம்மா பண்றீங்க! சண்டைபயிற்சி வீடியோவை வெளியிட்ட கவர்ச்சிபுயல் யாஷிகா! கலாய்த்து தள்ளும் ரசிகர்கள்!

என்னம்மா பண்றீங்க! சண்டைபயிற்சி வீடியோவை வெளியிட்ட கவர்ச்சிபுயல் யாஷிகா! கலாய்த்து தள்ளும் ரசிகர்கள்!


yashika-post-fight-practise-video

தமிழ் சினிமாவில் துருவங்கள் பதினாறு என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார் நடிகை யாஷிகா ஆனந்த்.  இதைத்தொடர்ந்து அவர் கவுதம் கார்த்தி நடிப்பில் வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே பெருமளவில் பிரபலமானார்.

 மேலும் அதனை தொடர்ந்து அவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 2  நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மேலும் பிரபலமானார்.மேலும் பிக்பாஸ் வீட்டில் அவர் நடிகர் மகத்துடன் காதல்  போன்ற பல சர்ச்சைகளில் சிக்கினார். 

yashika

அதன்பின் பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய யாஷிகா அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்துவருகிறார். மேலும் எப்பொழுதும் சமூகவலைத்தளங்களில் பிசியாக இருக்கும் யாஷிகா அவ்வப்போது கவர்ச்சி போட்டோசூட் நடத்தி அந்த புகைப்படத்தை தனது சமூகவலைதள பக்கத்தில் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.ஆனால் சமீபத்தில் சற்று வித்தியாசமாக சண்டைபயிற்சி எடுக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் அதனை கிண்டல் செய்து நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.மேலும் கிண்டலான வீடியோக்களையும் வெளியிட்டு வருகின்றனர்.