கண்ணை கவரும் யாசிகா; இவரால் மட்டும் தான் இப்படியெல்லாம் செய்ய முடியுமோ!

கண்ணை கவரும் யாசிகா; இவரால் மட்டும் தான் இப்படியெல்லாம் செய்ய முடியுமோ!


Yashika latest photo

பிக்பாஸ் மூலம் பிரபலமானவர்கள் பலர். அதில் ஒருவராக தன்னை இணைத்து கொண்டவர் கவர்ச்சி நடிகை யாசிகா ஆனந்த்.

தமிழ் சினிமாவில் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் ஹீரோயினியாக அறிமுகமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். இந்தப் படம் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.இந்தப் படத்தின் மூலம் யாஷிகாவுக்கு அப்போதே நல்ல வரவேற்பு கிடைத்தது. இருந்தாலும் அதையடுத்து அவர் கலந்து கொண்ட பிக்பாஸ் சீசன் 2வால் இந்தியா முழுவதும் பிரபலமானார். 

டெல்லியில் பிறந்த யாசிகா மாடலிங் துறையில் அறிமுகமாகி பின்னர் தமிழ் சினிமாவில் கால் பதித்தார். இளைஞர்களை வெகுவவாக கவர்ந்து வரும் யாசிகாவை சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் 943k ரசிகர்கள் பின்பற்றுகின்றனர். இதற்கு காரணம் இவர் அவ்வப்போது வெளியிடும் கவர்ச்சி புகைப்படங்கள் தான். 

yashika

இந்நிலையில் தனியார் நிறுவனம் ஒன்றின் விளம்பரத்திற்காக எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை யாசிகா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் மிகவும் அழகாக தெரியும் யாசிகா, "இவரால் மட்டும் தான் இப்படியெல்லாம் முடியுமோ!" என்று நம்மை நினைக்க தூண்டுகிறார்.