அட சூப்பர்.. பர்த்டேவுக்கு யாஷிகா என்ன செஞ்சுருக்காங்க பார்த்திங்களா?.. பர்த்டே பேபியின் கலக்கல் புகைப்படங்கள்..!!

அட சூப்பர்.. பர்த்டேவுக்கு யாஷிகா என்ன செஞ்சுருக்காங்க பார்த்திங்களா?.. பர்த்டே பேபியின் கலக்கல் புகைப்படங்கள்..!!



yashika birthday photo viral

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் மக்கள் மனதை கவர்ந்த நிகழ்ச்சிதான் பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பலருக்கும் தற்போது சினிமா துறையில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்துள்ளது.

yashika birthday

இதுபோல பிக்பாஸ் 2-வது சீசனில் கலந்து கொண்டு நன்கு விளையாடி மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றவர்தான் நடிகை யாஷிகா. இவர் கோலிவுட்டில் "கவலை வேண்டாம்" என்ற படத்தில் நடித்ததன் மூலமாக அறிமுகமானார். 

yashika birthday

அதனைத் தொடர்ந்து இருட்டு அறையில் முரட்டு குத்து மற்றும் துருவங்கள் 16, ஜாம்பி போன்ற படங்களிலும் மாடர்ன் உடையில் கவர்ச்சியாக நடித்துள்ளார். இவர் எஸ்.ஜே சூர்யாவுடன் கடமையை செய் என்ற படத்தில் நடித்திருந்த நிலையில், இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

yashika birthday

இந்த நிலையில் இணையதளபக்கத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் யாஷிகா அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருவார். இன்று யாஷிகாவின் பிறந்தநாள் என்பதால் பலரும் வாழ்த்து கூறிய நிலையில், அனைவரது வாழ்த்துக்களுக்கும் நன்றி கூறி யாஷிகா புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் தீயாக பரவி வருகிறது.