மோகன்லால், பிரித்விராஜ் நடிப்பில் உருவாகியுள்ள எல்2:எம்பூரான் திரைப்படம் வெளியீடு தேதி அறிவிப்பு.!
பிக் பாஸ் வீட்டில் அடித்துக்கொள்ளும் தோழிகள் யாஷிகா மற்றும் ஐஸ்வர்யா! வெளியான அதிர்ச்சி ப்ரோமோ வீடியோ!
பிரபல தமிழ் தொலைக்காட்சியான விஜ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மாபெரும் வெற்றிபெற்ற தொடர் பிக் பாஸ். இதன் முதல் பாகம் வெற்றிபெற்றதை தொடர்ந்து இதன் இரண்டாவது சீசன் தொடங்கப்பட்டு வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
உலக நாயகன் காலகாசன் இதன் இரண்டு தொடர்களையும் நடத்திவருகிறார். ஆரம்பத்தில் சீசன் இரண்டு சற்று எதிர்பார்ப்பு குறைவாகவே காணப்பட்டது. ஆனால் இறுதிக்கட்டத்தை நெருங்க நெருங்க இதன் மீது ரசிகர்களுக்கு ஆர்வம் தொற்றிக்கொண்டது.
இன்னும் சில நாட்களே மீதமுள்ள நிலையில் வாரம் ஒருவர் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்ற படுகிறார். அந்த வகையில் கடந்தவாரம் நடிகர் டேனியல் வெளியேறினார்.
இந்நிலையில் சீசன் இரண்டில் ஆம்ரம்பம் முதல் இன்றுவரை தோழிகளாக இருப்பவர்கள் யாஷிகா மற்றும் ஐஸ்வர்யா. பலமுறை பிக் பாஸ் இல்லத்தில் சண்டை வந்தபோதிலும் இவர்கள் இருவர் மட்டும் விட்டுக்கொடுக்காமல் நல்ல நண்பர்களாக இருந்து வந்தனர். ஆனால் இன்று வெளியாகியுள்ள ஒரு ப்ரோமோவில் இவர்கள் இருவரும் சண்டை போட்டுக்கொள்ளும் காட்சி வெளியாகியுள்ளது.
அதில் யாஷிகா ஐஸ்வர்யாவிடம் நான் உனக்காகத்தான் கேட்டேன் என்று சொல்ல, அதற்கு ஐஸ்வர்யா நான்தான் பொய் சொல்லிக்கிறேன் என்கிறார். இதனால் கோபமடைந்த யாஷிகா வீட்டை விட்டு கெளம்பு கெளம்பு என்று சொல்கிறார். நீங்களே அந்த விடியோவை பாருங்கள்!