சினிமா பிக்பாஸ்

லாஸ்லியா கதற கதற பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறிய கவின்!! யாஷிகா மற்றும் ஐஸ்வர்யா என்ன கூறியுள்ளார்கள் பார்த்தீர்களா!!

Summary:

yashika and aishwarya tweet about kavin leave from bigboss house

பிக்பாஸ் சீசன் 3 மிகவும் விறுவிறுப்பாக இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்துகொண்டு இருக்கின்றது. 16 போட்டியாளர்கள் கலந்துகொண்ட நிலையில் தற்போது சாண்டி, ஷெரின், முகேன், லாஸ்லியா, தர்சன் மற்றும் கவின் 6 பேர் மட்டுமே விளையாடி வந்தனர். பிக்பாஸ் எவ்வளவோ கடுமையான டாஸ்க் கொடுத்ததும் பிக்பாஸ் பட்டத்தை வெல்ல போட்டியாளர்கள் கடுமையாக உழைத்து வருகின்றனர். 

இந்நிலையில் நேற்று போட்டியாளர்களிடம் பிக்பாஸ் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். அதாவது 5 லட்சம் ரூபாயை பெற்று கொண்டு யார் வெளியே போக விரும்புகிறீர்கள் என்று கேட்டுள்ளார். அப்பொழுது கவின் நான் வெளியேற தயார் என்று கூறியுள்ளார். மேலும் போட்டியாளர்கள் எவ்வளவோ கூறியும் பிடிவாதமாக வீட்டை விட்டும் வெளியேறினார்.

yashika an aishwarya க்கான பட முடிவு

இந்நிலையில் சாண்டி மற்றும் லாஸ்லியா ஆகியோர் கதறி அழுதனர். இந்த செயல் ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை iஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், கடந்த வருடம் நடந்த பிக்பாஸ் சீசன் 2 போட்டியாளர்களான யாஷிகா ஆனந்த் மற்றும் ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் கவின் வெளியேறியது குறித்து வருத்ததுடன் கருத்து தெரிவித்துள்ளனர்.

அதில், யாஷிகா ஆனந்த் கவின் வெளியேறுவது வருத்தமான செயல் என்று  தெரிவித்திருந்தார். மேலும், ஐஸ்வர்யா தத்தா கவின் வெளியேறியது உண்மையில் வருத்தமாக உள்ளது கடவுள் அவருக்கு எல்லா வலிமையையும் சக்தியையும் கொடுக்கட்டும் என்று தெரிவித்துள்ளார்.  காமெடி நடிகர் சதீஷும் ஏன் போனாப்டி, தயவு செஞ்சி புரிஞ்சவங்க விளக்குங்க  என்று தெரிவித்துள்ளார்.


Advertisement