ஹீரோயின் ரேஞ்சுக்கு தோற்றம்..! மாடர்ன் உடை..! நடிகை யாஷிகா ஆனந்திற்கு இப்படி ஒரு தங்கையா உள்ளாரா..? வைரலாகும் புகைப்படம்..!
இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். கவர்ச்சி கலந்த ஹாரர் கதையில் நடித்த யாஷிகா ரசிகர்களின் வரவேற்பை பெற்று புகழின் உச்சத்துக்கு சென்றார்.
இந்நிலையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் இரண்டில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. தனக்கு கிடைத்த வாய்ப்பை மிக சரியாக பயன்படுத்தி நிகழ்ச்சியின் இறுதிவரை வந்த யாஷிகா யாரும் எதிர்பாராத விதமாக கடைசி வாரத்திற்கு முன் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அடுத்தடுத்த படங்களில் பிசியாக உள்ளார் யாஷிகா. இந்நிலையில் யாஷிகாவிற்கு ஓஷின் ஆனந்த் என்ற ஒரு தங்கை உள்ளார். அக்காவை போலவே மாடலிங் துறையில் இவரும் களமிறங்கியுள்ளார். சமீபத்தில் இவர் எடுத்த சில கவர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தில் வைராலகிவருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்.